ஜெட் ஏர்வேஸில் முதலீடு: ஹிந்துஜா குழுமம் ஆலோசனை

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முதலீடு மேற்கொள்வது குறித்து ஆலோசித்து வருவதாக ஹிந்துஜா குழுமம் தெரிவித்துள்ளது.


ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முதலீடு மேற்கொள்வது குறித்து ஆலோசித்து வருவதாக ஹிந்துஜா குழுமம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்குழுமம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஹிந்துஜா குழுமம் முழு அளவில் மதிப்பீடு செய்து வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனம், தகவல் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு திட்டங்கள், மின்சாரம், ரியல் எஸ்டேட், ஹெல்த்கேர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆர்வம் காட்டி வரும் ஹிந்துஜா குழுமம், தற்போது விமானத் துறையிலும் கால் பதிக்கும் வகையில் ஜெட் ஏர்வேஸில் முதலீட்டுக்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com