ஹுண்டாய் வென்யூ கார் அறிமுகம்

தென் கொரியாவைச் சேர்ந்த ஹுண்டாய் நிறுவனம் வென்யூ என்ற புதிய சொகுசுக் காரை இந்தியாவில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்துள்ளது.
ஹுண்டாய் வென்யூ கார் அறிமுகம்


தென் கொரியாவைச் சேர்ந்த ஹுண்டாய் நிறுவனம் வென்யூ என்ற புதிய சொகுசுக் காரை இந்தியாவில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து ஹுண்டாய் மோட்டார் இந்தியாவின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான எஸ் எஸ் கிம்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஹுண்டாய் நிறுவனத்தின் சர்வதேச வளர்ச்சி திட்டங்களுக்கு இந்திய சந்தை மையப்புள்ளியாக விளங்குகிறது. இதனை உணர்ந்து, இச்சந்தையில் நிறுவனத்தின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக வென்யூ கார் தற்போது  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
1 லிட்டர் டர்போ, 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் ஆகிய மூன்று என்ஜின் விருப்பத் தேர்வுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள வென்யூ கார் 33 செயற்கை நுண்ணறிவு செயல்பாடுகளை உள்ளடக்கிய நிறுவனத்தின் புளூலிங்க் தொழில்நுட்பத்தை தாங்கி வெளிவந்துள்ளது. இதில், 10 செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இந்திய சந்தைகளுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது.
வயல்லெஸ் போன் சார்ஜிங், காற்று சுத்திகரிப்பான், எலக்ட்ரிக் சன்ரூஃப், பாதுகாப்பிற்காக ஆறு ஏர்பேக்குகள், தானியங்கி டோர் லாக், வாகன ஸ்திரத்தன்மை மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வென்யூ காரில் இடம்பெற்றுள்ளன. 
1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் லிட்டருக்கு 18.27 கி.மீயும், 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் லிட்டருக்கு 17.52 கி.மீயும், 1.4 லிட்டர் டீசல் என்ஜின் லிட்டருக்கு 23.7 கி.மீயும் மைலேஜ் தரவல்லவை.
அனைத்து வகையான நவீன வசதிகளையும் கொண்ட வென்யூ காரின் விலை மாடல்களுக்கு ஏற்பட ரூ.6.5 லட்சம் முதல் ரூ.11.1 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த மாடலின் மேம்பாட்டுக்காக நிறுவனம் ரூ.690 கோடி வரை முதலீடு செய்துள்ளது என்றார் அவர்.
ஹுண்டாயின் இப்புதிய அறிமுகம் ஏற்கெனவே சந்தையில் உள்ள மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா மோட்டார்ஸ் நெக்ஸான், ஃபோர்டு எக்கோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா எக்யுவி 300 கார்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com