சுடச்சுட

  
  apripiagio


  இத்தாலியைச் சேர்ந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பியாஜியோ அப்ரில்லா ஸ்டார்ம்  என்ற புதிய வகை ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
  இதுகுறித்து பியாஜியோ வெஹிக்கிள் இந்தியா தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான டியேகோ கிராஃபி கூறியதாவது:
  அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அப்ரில்லா ஸ்டார்ம் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதி நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்கூட்டர் ஏனைய தயாரிப்புகளிலிருந்து மிகவும் மாறுபட்டது.
  125 சிசி திறன் கொண்ட இப்புதிய ஸ்கூட்டரின் விலை ரூ.65,000-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
  இந்தியாவில், பியாஜியோ நிறுவனம் அபே பிராண்டில் மூன்று சக்கர வாகன விற்பனையை கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகிறது. 
  இந்நிறுவனம், வெஸ்பா மற்றும் அப்ரில்லா பிராண்டுகளில் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai