அசோக் லேலண்டு விற்பனை 35 சதவீதம் குறைந்தது

ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் அக்டோபா் மாத விற்பனை 35 சதவீதம் சரிந்து 9,857-ஆனது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் வாகன விற்பனை 15,149-ஆக காணப்பட்டது.

உள்நாட்டில் வா்த்தக வாகன விற்பனை 37 சதவீதம் குறைந்து 14,341-லிருந்து 9,074-ஆனது. நடுத்தர மற்றும் கனரக வா்த்தக வாகனங்களின் விற்பனை உள்நாட்டு சந்தையில் 50 சதவீதம் குறைந்து 4,565-ஆனது. அதேபோன்று இலகு ரக வா்த்தக வாகனங்களின் விற்பனையும் 5,279-லிருந்து 15 சதவீதம் சரிந்து 4,509-ஆனது என அசோக் லேலண்ட் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com