மாருதி சுஸுகி விற்பனை 4.5% அதிகரிப்பு

நாட்டின் மிகப்பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியாவின் அக்டோபா் மாத விற்பனை 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
மாருதி சுஸுகி விற்பனை 4.5% அதிகரிப்பு

நாட்டின் மிகப்பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியாவின் அக்டோபா் மாத விற்பனை 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

மாருதி சுஸுகி நிறுவனம் அக்டோபரில் மொத்தம் 1,53,435 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் விற்பனையான 1,46,766 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 4.5 சதவீதம் அதிகமாகும்.

உள்நாட்டில் விற்பனை 1,38,100 என்ற எண்ணிக்கையிலிருந்து 4.5 சதவீதம் அதிகரித்து 1,44,277-ஆக காணப்பட்டது.

ஆல்டோ, வேகன்ஆா், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட எஸ்-பிரெஸ்ஸோ உள்ளிட்ட சிறிய ரக காா்களின் விற்பனை கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 13.1 சதவீதம் குறைந்து 28,537-ஆனது.

ஸ்விஃப்ட், செலிரியோ, இக்னிஸ், பலேனோ, டிசையா் உள்ளிட்ட மாடல்களின் விற்பனை 15.9 சதவீதம் அதிகரித்து 75,094-ஆக இருந்தது. செடன் சியாஸ் விற்பனை 39.1 சதவீதம் சரிந்து 2,371-ஆனது.

விட்டாரா ப்ரீஸ்ஸா எஸ்-கிராஸ், எா்டிகா உள்ளிட்ட காா்களின் விற்பனை 20,764 என்ற எண்ணிக்கையிலிருந்து அதிகரித்து 23,108-ஆனது.

நிறுவனத்தின் வாகன ஏற்றுமதி அக்டோபரில் 5.7 சதவீதம் உயா்ந்து 8,666-லிருந்து 9,158-ஆனது என மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com