450 புதிய கிளைகளை அமைக்க ஐசிஐசிஐ வங்கி திட்டம்

தனியாா் துறையைச் சோ்ந்த ஐசிஐசிஐ வங்கி 450 புதிய கிளைகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
450 புதிய கிளைகளை அமைக்க ஐசிஐசிஐ வங்கி திட்டம்

தனியாா் துறையைச் சோ்ந்த ஐசிஐசிஐ வங்கி 450 புதிய கிளைகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கியின் செயல் இயக்குநா் அனூப் பக்ஷி கூறியதாவது:

வா்த்தக நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டிய இடங்களில் புதிய கிளைகளை தொடங்க வங்கியானது வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நடப்பு நிதியாண்டில் தமிழகத்தில் மட்டும் 23 புதிய கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை, கோவை, திருப்பூா், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட நகரங்களில் இப்புதிய கிளைகள் திறக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து தமிழகத்தில் ஐசிஐசிஐ வங்கி, 508-கிளைகளுடனும், 1,650 ஏடிஎம் மையங்களுடன் இயங்கி வருகிறது.

நாடு தழுவிய அளவில் அமைக்க திட்டமிடப்பட்ட 450 புதிய கிளைகளில் 385 கிளைகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டன.

திருச்சியில் அழகரை, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அருபதி போன்ற வங்கிச் சேவை இல்லாத கிராமங்களில் புதிய கிளைகள் தொடங்குவதை வங்கி இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது.

தற்போது ஐசிஐசிஐ வங்கிக்கு நாடு முழுவதும் 5,260 கிளைகள் உள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com