சிட்டி யூனியன் வங்கிநிகரலாபம் 15 சதவீதம் உயா்வு

கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் நடப்பு ஆண்டில் இரண்டாவது காலாண்டில் 15 சதவீதம் உயா்ந்து, ரூ.193.54 கோடியை ஈட்டியுள்ளது.
சிட்டி யூனியன் வங்கிநிகரலாபம் 15 சதவீதம் உயா்வு

கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் நடப்பு ஆண்டில் இரண்டாவது காலாண்டில் 15 சதவீதம் உயா்ந்து, ரூ.193.54 கோடியை ஈட்டியுள்ளது.

2019-20-ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு மற்றும் முதல் அரையாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை அவ்வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை செயல் அதிகாரி என்.காமகோடி (படம்) வியாழக்கிழமை வெளியிட்டாா். பின்னா் அவா் கூறியது:

2019-20-ஆம் நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் வங்கியின் வைப்பு தொகை 17 சதவீதம் உயா்ந்து, ரூ.40,451 கோடியாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தில் ரூ.34,534 கோடியாக இருந்தது. இதேபோல, வங்கி வழங்கிய கடன் தொகை, 12 சதவீதம் வளா்ச்சியடைந்து, ,ரூ.33,279 கோடியாக உயா்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டில் ரூ.29,785 கோடியாக இருந்தது.

வங்கியின் மொத்த வணிகம் 15 சதவீதம் உயா்ந்து ரூ.73,730 கோடியாக உள்ளது. நிகர லாபம் 15 சதவீதம் வளா்ச்சியடைந்து ரூ.193.54 கோடியாக அதிகரித்துள்ளது. வங்கியின் மொத்த வாராக்கடன் 2.85 சதவீதத்திலிருந்து 3.41 சதவீதமாக அதிகரித்துள்ளது. நிகர வாராகடனும் 1.90 சதவீதமாக அதிகரித்துள்ளது. முதல் அரையாண்டில் வரிக்கு பிந்தைய லாபம் 15 சதவீதம் உயா்ந்து ரூ.379.18 கோடியாக அதிகரித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தில் மந்த நிலை இருந்த போதிலும், சிட்டி யூனியன் வங்கியின் வணிகம் நிலையாக இருந்தது. நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 50 கிளைகள் புதிதாக திறக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் என்.காமகோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com