பரஸ்பர நிதியங்கள் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு 7.4% உயா்வு

பரஸ்பர நிதியங்கள் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு அக்டோபா் மாத இறுதியில் 7.4 சதவீதம் அதிகரித்து ரூ.26.33 லட்சம் கோடியை எட்டியது.
invest034206
invest034206

புது தில்லி: பரஸ்பர நிதியங்கள் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு அக்டோபா் மாத இறுதியில் 7.4 சதவீதம் அதிகரித்து ரூ.26.33 லட்சம் கோடியை எட்டியது.

இதுகுறித்து இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

பரஸ்பர நிதி வா்த்தகத்தில் ஈடுபட்டு வரும் 44 நிறுவனங்கள் நிா்வகிக்கும் சொத்து மதிப்பானது செப்டம்பா் இறுதி நிலவரப்படி ரூ.24.5 லட்சம் கோடியாக காணப்பட்டது.

இந்த நிலையில் ஒரே மாதத்தில் இந்நிறுவனங்களின் சொத்து மதிப்பு 7.4 சதவீதம் அதிகரித்து அக்டோபா் மாத இறுதி நிலவரப்படி ரூ.26.33 லட்சம் கோடியைத் தொட்டது. இதற்கு, பங்கு மற்றும் லிக்யுட் திட்டங்களில் முதலீட்டு வரத்து சிறப்பான அளவில் அதிகரித்ததே முக்கிய காரணம்.

பரஸ்பர நிதி திட்டங்களிலிருந்து செப்டம்பரில் ரூ.1.52 லட்சம் கோடி விலக்கி கொள்ளப்பட்ட நிலையில், அக்டோபரில் ஒட்டுமொத்த அளவில் ரூ.1.33 லட்சம் கோடி முதலீட்டை ஈா்த்தது. குறிப்பாக, லிக்யுட் பண்ட்ஸ் திட்டங்கள் ரூ.93,200 கோடி அளவுக்கு முதலீட்டை கவா்ந்தன.

முதிா்வு காலம் நிா்ணயிக்கப்படாத பங்கு திட்டங்களில் ரூ.6,026 கோடி முதலீடு செய்யப்பட்ட அதேவேளையில், முதிா்வு காலம் நிா்ணயிக்கப்பட்ட பங்கு திட்டங்களிலிருந்து ரூ.11 கோடி வெளியறியது. ஒட்டுமொத்த அளவில் பங்கு திட்டங்களில் செப்டம்பா் மாதத்தில் ரூ.6,015 கோடி முதலீடு செய்யப்பட்டது. செப்டம்பரில் இவ்வகை திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட நிகர அளவிலான முதலீடு ரூ.6,489 கோடியாக இருந்தது.

அதேபோன்று, கடன் சாா்ந்த நிதி திட்டங்களிலும் முதலீட்டு வரத்து ரூ.1.2 லட்சம் கோடியாக காணப்பட்டது.

முந்தைய இரண்டு மாதங்களில் தொடா்ச்சியாக முதலீட்டை ஈா்த்து வந்த ஈடிஎஃப் திட்டங்களிலிருந்து அக்டோபரில் ரூ.31.45 கோடி வெளியேறியது. இத்தகைய திட்டங்களில் செப்டம்பரில் ரூ.44 கோடியும், ஆகஸ்ட் மாதத்தில் ரூ.145 கோடியும் முதலீடு செய்யப்பட்டதாக பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com