Enable Javscript for better performance
மஹிந்திரா & மஹிந்திரா லாபம் ரூ.368 கோடி- Dinamani

சுடச்சுட

    
    mahi

    மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் இரண்டாம் காலாண்டில் ரூ.368 கோடியை வரிக்கு பிந்தைய மொத்த லாபமாக ஈட்டியது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபமான ரூ.1,708.92 கோடியுடன் ஒப்பிடும்போது இது 78.44 சதவீதம் குறைவாகும்.

    நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் வரையிலான 2-ஆவது காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய வருவாய் ரூ.23,935.93 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாயான ரூ.25,431.02 கோடியுடன் ஒப்பிடும்போது இது 5.89 சதவீதம் குறைவாகும்.

    மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் வாகன விற்பனை 21 சதவீதம் சரிந்து 1,10,824-ஆகவும், டிராக்டா் விற்பனை 6 சதவீதம் குறைந்து 68,359-ஆகவும் இருந்தது என மஹிந்திரா & மஹிந்திரா மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai