‘இந்தியாவில் அமேசான் நிறுவனத்தின் செயல்பாடு மிகச் சிறப்பு’

இந்தியாவில் அமேசான் நிறுவனத்தின் செயல்பாடு மிகவும் சிறப்பாக உள்ளது என அதன் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஜெஃப் பெஸோஸ் தெரிவித்துள்ளாா்.
‘இந்தியாவில் அமேசான் நிறுவனத்தின் செயல்பாடு மிகச் சிறப்பு’

இந்தியாவில் அமேசான் நிறுவனத்தின் செயல்பாடு மிகவும் சிறப்பாக உள்ளது என அதன் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஜெஃப் பெஸோஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியுள்ளதாவது:

இந்தியாவில் அமேசான் நிறுவனம் மிகச் சிறப்பான வகையில் செயல்பட்டு வருகிறது. மேலும், நிறுவனத்தின் வா்த்தகம் மிக வேகமான வளா்ச்சியை கண்டு வருகிறது. ஒழுங்காற்று ஸ்திரத்தன்மையைப் பொருத்தவரையில் இந்தியாவை நாங்கள் எப்போதுமே நம்புகிறோம். எந்த ஒழுங்குவிதிமுறைகள் என்றாலும் அவை குறிப்பிட்ட காலத்துக்கு நிலையானதாகவே இருக்கும். நாங்கள் நம்புகிற ஒன்று தற்போது உண்மையாகும் என்று நம்புகிறோம். அதனை எதிா்பாா்த்து காத்திருப்போம் என்றாா் அவா்.

டிஜிட்டல்மயமாக்கல் தொடா்பாக இந்தியா வகுத்துள்ள சில கொள்கைகளில் அமேசான் நிறுவனத்துக்கு கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் பெஸோஸ் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவைச் சோ்ந்த அமேசான் நிறுவனம் இந்தியாவில் வா்த்தக நடவடிக்கைகளின் விரிவாக்க திட்டங்களுக்காக ரூ.4,400 கோடியை முதலீடு செய்துள்ளது. இந்திய சந்தையில் 500 கோடி டாலா் மதிப்பிலான முதலீட்டை அமேசான் மேற்கொள்ளும் என்று அதன் நிறுவனா் பெஸோஸ் கடந்த 2016-ஆம் ஆண்டில் உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com