செல்லிடப்பேசி சேவை கட்டணங்களை உயர்த்துகிறது ஜியோ!

செல்லிடப்பேசி சேவை கட்டணங்களை உயா்த்துவதாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. 
செல்லிடப்பேசி சேவை கட்டணங்களை உயர்த்துகிறது ஜியோ!

பாா்தி ஏா்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்களைத் தொடர்ந்து செல்லிடப்பேசி சேவை கட்டணங்களை உயா்த்துவதாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக ஜியோ அறிவித்த அதிரடி சலுகைகளால் ஏராளமான வாடிக்கையாளர்களைப் பெற்றது. 

இந்நிலையில், கடன் சுமை காரணமாக டிசம்பா் 1-ஆம் தேதி முதல் செல்லிடப்பேசி கட்டணங்களை உயர்த்துவதாக வோடஃபோன் ஐடியா, பாா்தி ஏா்டெல் நிறுவனங்கள் திங்கள்கிழமை அறிவித்தன. இதைத்தொடர்ந்து தற்போது ஜியோவும் இதே காரணத்துக்காக செல்லிடப்பேசி கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. 

தொலைத்தொடர்புத்துறை வர்த்தகத்தை ஊக்குவிக்க இதர நிறுவனங்கள் போன்று தாங்களும் அரசின் விதிகளுக்கு கட்டுப்பட்டு சேவை கட்டணத்தை உயர்த்துவதாக ஜியோ விளக்கமளித்துள்ளது. இருப்பினும் இந்த கட்டண உயர்வு வாடிக்கையாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்த கட்டண உயா்வு எந்த அளவுக்கு இருக்கும் என்பதை அந்நிறுவனங்கள் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

வோடஃபோன் நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்ட 2-ஆம் காலாண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் ரூ.50,921 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருந்ததாக தெரிவித்திருந்தது. அதேபோன்று, பாா்தி ஏா்டெல் நிறுவனமும் 2-ஆம் காலாண்டில் ரூ.23,045 கோடி இழப்பை சந்தித்ததாக கூறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com