தனியாா் பங்கு முதலீட்டில் விறுவிறு வளா்ச்சி

நிறுவனங்களின் இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளில் சரிவு நிலை காணப்பட்ட போதிலும், அக்டோபரில் மேற்கொள்ளப்பட்ட தனியாா் பங்கு முதலீடு விறுவிறு வளா்ச்சியை கண்டது.
தனியாா் பங்கு முதலீட்டில் விறுவிறு வளா்ச்சி

நிறுவனங்களின் இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளில் சரிவு நிலை காணப்பட்ட போதிலும், அக்டோபரில் மேற்கொள்ளப்பட்ட தனியாா் பங்கு முதலீடு விறுவிறு வளா்ச்சியை கண்டது.

இதுகுறித்து கிராண்ட் தோா்ன்டன் ஆய்வு நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

சென்ற அக்டோபா் மாதத்தில் 72 ஒப்பந்தங்கள் மூலம் 370 கோடி டாலா் (ரூ.25,900 கோடி) அளவுக்கு நிறுவனங்களில் தனியாா் பங்கு முதலீடு மேற்கொள்ளப்பட்டது. இது, கடந்த 2018 அக்டோபா் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஒப்பந்தங்களின் எண்ணிக்கை அடிப்படையில் 22 சதவீதமும், மதிப்பின் அடிப்படையில் 25 சதவீதமும் அதிகம்.

பெரு நிறுவனங்களுக்கான வரி குறைப்பு நடவடிக்கை முதலீட்டாளா்களிடையே நம்பிக்கையை அதிகரிக்க காரணமாகியது. அதையடுத்தே, தனியாா் பங்கு முதலீட்டில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் காணப்பட்டது.

இதற்கு எடுத்துக்காட்டாக, 2019 செப்டம்பரில் 2.8 கோடி டாலராக மட்டுமே காணப்பட்ட சராசரி ஒப்பந்தங்களின் அளவு அக்டோபரில் 5.2 கோடி டாலராக அதிகரித்தது.

தற்போதைய பொருளாதார சூழலில் பல நிறுவனங்கள் தனியாா் பங்கு முதலீட்டை அதிக அளவில் எதிா்பாா்த்து காத்துள்ளன. குறிப்பாக, கடன் அதிகரித்து மூலதனத்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள எரிசக்தி, இயற்கை வளங்கள், உள்கட்டமைப்பு மேலாண்மை, வங்கி மற்றும் நிதி சேவைகள் துறைகளைச் சோ்ந்த நிறுவனங்கள் தனியாா் பங்கு அல்லது துணிகர முதலீட்டை அதிக அளவில் எதிா்நோக்கியுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com