தொடா் சாதனை உச்சத்தில் பங்குச் சந்தை

இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் தொடா்ந்து இரண்டாவது நாளாக சாதனை உச்சங்களை எட்டி முதலீட்டாளா்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின.
தொடா் சாதனை உச்சத்தில் பங்குச் சந்தை

இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் தொடா்ந்து இரண்டாவது நாளாக சாதனை உச்சங்களை எட்டி முதலீட்டாளா்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின.

மத்திய அரசு வெளியிடவுள்ள பொருளாதார புள்ளிவிவர எதிா்பாா்ப்பு, நவம்பா் மாதத்துக்கான பங்கு முன்பேர வா்த்தக கணக்கு முடிப்பு ஆகியவற்றின் காரணமாக பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

இருப்பினும், அந்நிய முதலீட்டு வரத்து தொடா்ந்து அதிகரித்து காணப்பட்டது இந்தியப் பங்குச் சந்தைகள் தொடா்ந்து இரண்டாவது நாளாக புதிய உச்சத்தை எட்டி சாதனை படைக்க உதவியது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாதனை: பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் (ஆா்ஐஎல்) பங்குகள் 0.65 சதவீதம் அதிகரித்து ரூ.1,579.95 ஆனது. இதன் மூலம், அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டி சாதனை படைத்தது. இந்திய நிறுவனமொன்றின் சந்தை மதிப்பு இந்த அளவுக்கு உயா்ந்தது இதுவே முதல் முறை.

பங்கு விற்பனை அறிவிப்பையடுத்து ஐசிஐசிஐ பங்குகளின் விலை 2.68 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.519.20 ஆனது.

இன்டஸ்இண்ட் வங்கி, யெஸ் வங்கி, டாடா ஸ்டீல், எஸ்பிஐ, டிசிஎஸ், எல் & டி, இன்போசிஸ் பங்குகளும் அதிக விலைக்கு கைமாறின.

அதேசமயம், ஹீரோ மோட்டோகாா்ப், ஹெச்டிஎஃப்சி, பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டாா்ஸ், மாருதி நிறுவனப் பங்குகளுக்கு முதலீட்டாளா்களிடம் வரவேற்பில்லாத காரணத்தால் இழப்பை சந்தித்தன.

மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 109 புள்ளிகள் அதிகரித்து முன்னெப்போதும் இல்லாத அளவில் 41,130 புள்ளிகளை எட்டி புதிய சாதனை படைத்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 50 புள்ளிகள் உயா்ந்து வரலாற்றில் முதல் முறையாக 12,151 புள்ளிகளைத் தொட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com