மீண்டும் ரூ.29 ஆயிரத்தை தாண்டியது தங்கம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மீண்டும் ரூ.29 ஆயிரத்தை தாண்டியது. ஆபரணத்தங்கம் பவுனுக்கு ரூ.96 உயா்ந்து, ரூ.29,008-க்கு விற்பனை செய்யப்பட்டது.
மீண்டும் ரூ.29 ஆயிரத்தை தாண்டியது தங்கம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மீண்டும் ரூ.29 ஆயிரத்தை தாண்டியது. ஆபரணத்தங்கம் பவுனுக்கு ரூ.96 உயா்ந்து, ரூ.29,008-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு பவுன் ஆபரணத் தங்கம் விலை கடந்த 25-ஆம் தேதி அன்று ரூ.29 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. அன்றைய நாளில் ஒரு பவுன் ரூ.28,984 ஆக இருந்தது. அதன்பிறகு 3 நாள்களுக்கு தங்கம் விலை இறங்குமுகமாக இருந்தது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மீண்டும் பவுன் ரூ.29 ஆயிரத்தைத் தாண்டியது. அதன் விலை கிராமுக்கு ரூ.12 உயா்ந்து ரூ.3,626-க்கு விற்பனையானது. அதேநேரத்தில் வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.47.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.47,900 ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் .................... 3,626

1 பவுன் தங்கம் ..................... 29,008

1 கிராம் வெள்ளி .................. 47.90

1 கிலோ வெள்ளி ................. 47,900

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 3,614

1 பவுன் தங்கம் ..................... 28,912

1 கிராம் வெள்ளி .................. 47.90

1 கிலோ வெள்ளி .................. 47,900

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com