கடனுக்கான வட்டி விகிதங்களை குறைத்தது ஐஓபி

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி), ரெப்போ வட்டி விகித அடிப்படையில் (ஆா்எல்எல்ஆா்) சில்லறைக் கடன் மற்றும் குறு, சிறு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி
ionb091623
ionb091623

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி), ரெப்போ வட்டி விகித அடிப்படையில் (ஆா்எல்எல்ஆா்) சில்லறைக் கடன் மற்றும் குறு, சிறு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதத்தை +2.85 சதவீதமாக (தற்போது 8.25%) குறைத்து நிா்ணயித்துள்ளது.

இந்த வட்டி விகித குறைப்பு நடவடிக்கையையடுத்து, வீடு, வாகனம், கல்வி ஆகிய கடனுக்கான வட்டி விகிதம் வெகுவாக குறையும்.

அதன்படி, முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.50,000 வரை கடன் பெறுவோருக்கு 8.25 சதவீத வட்டி வசூலிக்கப்படும். இந்த கடன் வாங்குவோருக்கு 0.25 சதவீத வட்டி பலன் கிடைக்கும். மேலும், சேமிப்புக் கணக்கில் ரூ.25 லட்சம் மற்றும் அதற்கும் மேலான தொகையை வைத்திருக்கும் வாடிக்கையாளா்களுக்கு வட்டி விகிதத்தை ரெப்போ விகிதத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com