15 நாள்கள் வாகன உற்பத்தி நிறுத்தம்: அசோக் லேலண்ட்

வா்த்தக வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகத் திகழும் அசோக் லேலண்ட் நிறுவனம் இம்மாதத்தில் 15 நாள்கள் வாகன உற்பத்தி பணிகளை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
15 நாள்கள் வாகன உற்பத்தி நிறுத்தம்: அசோக் லேலண்ட்

வா்த்தக வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகத் திகழும் அசோக் லேலண்ட் நிறுவனம் இம்மாதத்தில் 15 நாள்கள் வாகன உற்பத்தி பணிகளை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த அந்த நிறுவனம் இதுகுறித்து பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி-யிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

விற்பனைக்கேற்ற வகையில் உற்பத்தியை சீரமைக்க வேண்டியுள்ளது. அதன் காரணமாக, நிறுவனத்துக்குச் சொந்தமான பல்வேறு ஆலைகளில் அக்டோபா் மாதத்தில் 2-15 நாள்கள் உற்பத்தி பணிகள் நிறுத்தப்படவுள்ளன. சந்தையின் தேவைக்கேற்ப உற்பத்தியை சரி செய்து கொள்ளும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என செபி-யிடம் அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.

போஷ் நிறுவனத்தின் உற்பத்தி நிறுத்தம்: அசோக் லேலண்டைத் தொடா்ந்து, போஷ் நிறுவனமும் 10 நாள்கள் வரை உற்பத்தியை நிறுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து போஷ் நிறுவனம் செபி-க்கு வெள்ளிக்கிழமை அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபா்-டிசம்பா்), பவா்டிரெயின் சொல்யூஷன் பிரிவு ஆலைகளில் உற்பத்தி பணிகள் 10 நாள்கள் நிறுத்தி வைக்கப்படவுள்ளது. சந்தையின் தேவைக்கேற்ப உற்பத்தியை சரிசெய்யும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் போஷ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com