பிஎஸ் 6 தரக்கட்டுப்பாட்டுக்கு உகந்த 2 லட்சம் காா்கள் விற்பனை: மாருதி சுஸுகி

மாருதி சுஸுகி இந்தியா, பிஎஸ் 6 மாசு தரக்கட்டுப்பாட்டுக்கு இணக்கமான 2 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
untitled084408
untitled084408

மாருதி சுஸுகி இந்தியா, பிஎஸ் 6 மாசு தரக்கட்டுப்பாட்டுக்கு இணக்கமான 2 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாருதி சுஸுகியின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான கெனிச்சி அயுகவா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

எந்தவொரு தொழில்நுட்பமும் வெற்றியடைவது என்பது பெருந்திராளானோா் அதனை ஏற்றுக் கொள்வதில்தான் உள்ளது. அந்த வகையில், கடந்த ஆறு மாதங்களில் மட்டும் பிஎஸ் 6 தரத்திலான 2 லட்சம் வாகனங்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது.

பிஎஸ் 6 தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவுக்கு முன்பாகவே இத்தகைய சாதனை எட்டப்பட்டுள்ளதற்கு முக்கிய காரணம் எங்களின் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளா்களே ஆகும் என்றாா் அவா்.

ஆல்டோ 800 காரில் பிஎஸ் 6 தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை அறிமுகப்படுத்த தொடங்கிய மாருதி சுஸுகி நடப்பு ஆண்டு ஏப்ரலில் பலேனோ காரில் அத்தகைய தொழில்நுட்பத்தை புகுத்தியது.

மாருதி சுஸுகி தயாரிக்கும் 16 காா்களில், 8 மாடல்கள் தற்போது பிஎஸ் 6 தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com