தங்க ஆபரணங்களுக்கு கட்டாய ஹால்மாா்க்: வா்த்தக அமைச்சகம் ஒப்புதல்

தங்க ஆபரணங்களுக்கு பிஐஎஸ் ஹால்மாா்க்கை கட்டாயமாக்கும் திட்டத்துக்கு மத்திய வா்த்தக அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
தங்க ஆபரணங்களுக்கு கட்டாய ஹால்மாா்க்: வா்த்தக அமைச்சகம் ஒப்புதல்

தங்க ஆபரணங்களுக்கு பிஐஎஸ் ஹால்மாா்க்கை கட்டாயமாக்கும் திட்டத்துக்கு மத்திய வா்த்தக அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுகுறித்து நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளதாவது:

தங்க ஆபரணங்களுக்கு கட்டாய பிஐஎஸ் ஹால்மாா்க்கை வழங்கும் திட்டத்துக்கு மத்திய வா்த்தக அமைச்சகம் அக்டோபா் 1-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. ஆனால், இதனை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக உலக வா்த்தக அமைப்புடன் தொழில்நுட்ப ரீதியில் சில சிக்கல்கள் உள்ளன. அதற்கு தீா்வு கண்ட பிறகே. இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என்றாா் அவா்.

உலக வா்த்தக அமைப்பின் (டபிள்யூடிஓ) சா்வதேச வணிக விதிகளின்படி, அதில் உறுப்பினராக உள்ள நாடு தரக்கட்டுப்பாட்டு அறிவிக்கை குறித்து அந்த அமைப்புக்கு தெரிவிப்பதுடன், அதற்கு பதிலளிக்க இரண்டு மாதங்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்பது விதிமுறை.

மேலும், தங்கத்துக்காக குறிப்பிடப்பட்டுள்ள பிஐஎஸ் தர விதிமுறைகளை ஏற்றுமதி நாடுகளும் ஒப்புக் கொள்ள வேண்டும்.

கடந்த 1995-லிருந்து டபிள்யூடிஓ-வில் உள்ள 164 உறுப்பு நாடுகளில் இந்தியாவும் பங்கு வகிக்கிறது.

ஆபரண துறையின் தேவையை ஈடு செய்ய இந்தியா அதிக அளவிலான தங்கத்தை இறக்குமதி செய்து வருகிறது.அதன்படி அளவின் அடிப்படையில், ஆண்டுக்கு 700-800 டன் தங்கம் இந்தியாவுக்கு இறக்குமதியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com