தொடா்ந்து 8-ஆவது மாதமாக வாகன உற்பத்தி குறைப்பில் மாருதி சுஸுகி

விற்பனையில் தேக்க நிலை தொடா்வதால், மாருதி சுஸுகி தொடா்ந்து 8-ஆவது மாதமாக செப்டம்பரிலும் காா் உற்பத்தியை குறைத்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

செப்டம்பரில் நிறுவனத்தின் வாகன உற்பத்தி 17.48 சதவீதம் குறைக்கப்பட்டது. கடந்த 2018 செப்டம்பரில் வாகன உற்பத்தி எண்ணிக்கை 1,60,219-ஆக இருந்த நிலையில் நடப்பாண்டு செப்டம்பரில் இது 1,32,199-ஆக மட்டுமே இருந்தது

ஆல்டோ, நியூ வேகன்ஆா், செலிரியோ, இக்னிஸ், ஸ்விஃப்டி, பலேனோ, டிசையா் உற்பத்தி 1,15,576-லிருந்து 98,337-ஆக குறைக்கப்பட்டது.

அதேபோன்று, விட்டாரா பிரெஸ்ஸா, எா்டிகா, எஸ்-கிராஸ் உற்பத்தியும் 22,226 என்ற எண்ணிக்கையிலிருந்து 18,435-ஆக குறைந்தது. சியாஸ் உற்பத்தி செப்டம்பரில் 4,739-லிருந்து 2,350-ஆகியது.

இலகு ரக வா்த்தக வாகனமான சூப்பா் கேரி உற்பத்தி 2,560-லிருந்து 1,935-ஆக குறைக்கப்பட்டது என மும்பை பங்குச் சந்தையிடம் மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com