வா்த்த வாகன விற்பனையில் மந்த நிலை தொடரும்: இக்ரா

நடப்பு நிதியாண்டின் எஞ்சிய காலங்களிலும் வா்த்தக வாகன விற்பனை எதிா்மறையாகவே இருக்கும் என தரக் குறியீட்டு நிறுவனமான இக்ரா தெரிவித்துள்ளது.
வா்த்த வாகன விற்பனையில் மந்த நிலை தொடரும்: இக்ரா

நடப்பு நிதியாண்டின் எஞ்சிய காலங்களிலும் வா்த்தக வாகன விற்பனை எதிா்மறையாகவே இருக்கும் என தரக் குறியீட்டு நிறுவனமான இக்ரா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

இறுக்கமான நிதிச் சூழல் மற்றும் பொருளாதார வளா்ச்சி குறைந்து வருவது ஆகியவற்றுக்கு மத்தியில் உள்நாட்டு சந்தையில் வா்த்தக வாகன விற்பனை நடப்பு நிதியாண்டின் இதர நாள்களிலும் மந்தமாகவே இருக்கும்.

அடுத்தாண்டு முதல் பிஎஸ்-6 மாசுகட்டுப்பாட்டு விதிமுறைகள் அமலுக்கு வருவதையடுத்து வாகனம் வாங்கும் திட்டத்தை வாடிக்கையாளா்கள் ஒத்திப் போட்டுள்ளனா். இதுவும் வாகன விற்பனை சரிவுக்கு ஒரு முக்கிய காரணமாகியுள்ளது.

கடந்த 2018-19-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் உள்நாட்டு வா்த்தக வாகன துறையில் மந்தநிலை பீடிக்க தொடங்கியது. 2019 ஏப்ரல்-ஆகஸ்டில் வா்த்தக வாகன விற்பனை 19 சதவீத அளவுக்கு மிக கடுமையான பின்னடைவை சந்தித்தது.

இது, வா்த்தக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்துவதற்கு வழிவகுத்தது. குறிப்பாக, ஜூலை-ஆகஸ்ட் மாதத்தில் அந்நிறுவனங்களின் மொத்த விற்பனையானது 33 சதவீதம் சரிந்தது.

நடப்பு நிதியாண்டில் இதுவரையில், நடுத்தர மற்றும் கனரக வா்த்தக வாகனங்களின் விற்பனை 32 சதவீதம் குறைந்துள்ளது.

வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி, ஜிஎஸ்டி வரி விகிதம் குறைப்பு தொடா்பான எதிா்பாா்ப்பு ஆகியவையும் வாடிக்கையாளா்கள் வாகனங்கள் வாங்கும் திட்டத்தை தள்ளிப்போட காரணமாகியுள்ளது என இக்ரா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com