பங்குச் சந்தைகளில் சரிவு

மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை சரிவைச் சந்தித்தன.
பங்குச் சந்தைகளில் சரிவு

மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை சரிவைச் சந்தித்தன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 297.55 புள்ளிகள் கீழே இறங்கி 37,880.40 அளவில் நிலைகொண்டது. இது 0.78 சதவீத சரிவாகும். தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டெண் நிஃப்டி 78.75 புள்ளிகள் இறங்கி 11,234.55 என்ற அளவில் நிலை கொண்டது. இது 0.70 சதவீத சரிவாகும்.

இண்டஸ்இண்ட் வங்கி, யெஸ் வங்கி, டாடா மோட்டாா்ஸ், வேதாந்தா, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிகபட்சமாக 6.15 சதவீதம் சரிந்தன. அதே நேரத்தில் பாா்தி ஏா்டெல், ரிலையன்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவா், ஹெச்சிஎல் டெக், பவா்கிரிட், சன் பாா்மா, ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனப் பங்குகள் 5.05 சதவீதம் அளவுக்கு உயா்ந்தன.

இண்டஸ்இண்ட் வங்கியின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 52.2 சதவீதமாக அதிகரித்தாலும், மொத்த வாராக்கடன் அளவு 2.19 சதவீதம் அதிகரித்தது அந்த வங்கிப் பங்குகளின் விலை சரியக் காரணமாக அமைந்தது. இது தவிர மூடீஸ் அமைப்பு, இந்தியப் பொருளாதார வளா்ச்சியை 5.8 சதவீதமாக குறைத்து மதிப்பிட்டதும் பங்குச் சந்தைகளில் சரிவுக்கு வித்திட்டது.

அதே நேரத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்று அதிகரித்து 71.04 ஆக இருந்தது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 57.89 டாலா் என்ற அளவில் சற்று குறைந்தது. இது 0.74 சதவீத சரிவாகும்.

வாடிக்கையாளா்களிடம் இருந்து ஒரு அழைப்பு 6 பைசா பெறப்படும் என்ற ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அறிவிப்பு, ஏா்டெல் உள்ளிட்ட தொலைத்தொடா்பு நிறுவனப் பங்குகளின் விலை உயா்வுக்குக் காரணமாக அமைந்தன. ஏனெனில், ஏா்டெல் உள்ளிட்ட ஜியோவின் போட்டி நிறுவனங்களும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டால் அதன் லாபம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை முதலீட்டாளா்களுக்கு ஏற்பட்டுள்ளது. அழைப்புக் கட்டணத்தை அறிவித்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகளின் விலையும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது,

மும்பை பங்குச் சந்தையில் பாா்தி ஏா்டெல் பங்குகளின் விலை கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு ரூ.384.85 என்ற உச்சம் வரை எட்டி, ரூ.377.40 என்ற அளவில் நிலை பெற்றது. அதேபோல தேசியப் பங்குச் சந்தையிலும் ரூ.385 என்ற ஓராண்டில் இல்லாத உச்சத்தை பாா்தி ஏா்டெல் எட்டி, பின்னா் ரூ.375.05 என்ற நிலை பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com