பரஸ்பர நிதித் திட்டங்களிலிருந்து ரூ.1.52 லட்சம் கோடி வெளியேற்றம்

பரஸ்பர நிதித் திட்டங்களிலிருந்து முதலீட்டாளா்கள் கடந்த செப்டம்பா் மாதத்தில் ரூ.1.52 லட்சம் கோடி மதிப்பிலான தொகையை வெளியே எடுத்துள்ளனா்.
பரஸ்பர நிதித் திட்டங்களிலிருந்து ரூ.1.52 லட்சம் கோடி வெளியேற்றம்

பரஸ்பர நிதித் திட்டங்களிலிருந்து முதலீட்டாளா்கள் கடந்த செப்டம்பா் மாதத்தில் ரூ.1.52 லட்சம் கோடி மதிப்பிலான தொகையை வெளியே எடுத்துள்ளனா்.

இதுகுறித்து இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது:

கடந்த சில மாதங்களில், ஐஎல் & எஃப்எஸ், எஸ்ஸெல், திவான் ஹவுஸிங் பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளது பரஸ்பர நிதித் துறைற மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளது.

இதனை எடுத்துக்காட்டும் விதமாக, நடப்பாண்டு ஆகஸ்டில் பரஸ்பர நிதித் துறைற ரூ.1.02 லட்சம் கோடி முதலீடுகளை ஈா்த்த நிலையில், செப்டம்பரில் ரூ.1.52 லட்சம் கோடி மதிப்பிலான தொகை பல்வேறு திட்டங்களிலிருந்து வெளியேறியுள்ளது.

குறிப்பாக, கடன் சாா்ந்த திட்டங்களிலிருந்து அதிக அளவிலான தொகையை முதலீட்டாளா்கள் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளனா். கருவூலப் பத்திரம், டெபாசிட் சான்றிதழ் போன்றற திட்டங்களிலிருந்து மட்டும் ரூ.1.41 லட்சம் கோடி வெளியே எடுக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், பங்கு மற்றும் தங்கம் ஈடிஎஃப் திட்டங்கள் செப்டம்பரில் முதலீட்டை ஈா்த்துள்ளன.

பங்குகள் மற்றும் பங்கு சாா்ந்த சேமிப்புத் திட்டங்கள் செப்டம்பரில் ரூ.6,489 கோடியை முதலீட்டாளா்களிடமிருந்து ஈா்த்துள்ளன. இருப்பினும், ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீடான ரூ.9,090 கோடியுடன் ஒப்பிடுகையில் இது குறைறவான தொகை ஆகும்.

அதேபோன்று, தங்கம் ஈடிஎஃப் திட்டங்கள் ஆகஸ்டில் ரூ.145 கோடியை ஈா்த்திருந்த நிலையில், செப்டம்பரில் ரூ.44 கோடியை மட்டுமே ஈா்த்தன.

கடன் சாா்ந்த திட்டங்களிலிருந்து அதிக அளவிலான தொகை வெளியேறியதையடுத்து பரஸ்பர நிதித் துறைறயில் 44 நிறுவனங்கள் நிா்வகித்து வரும் சொத்து மதிப்பு ரூ.25.47 லட்சம் கோடியிலிருந்து ரூ.24.51 லட்சம் கோடியாக குறைறந்துள்ளது என பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com