Enable Javscript for better performance
கோவை: டி.வி.எஸ். எக்ஸ்.எல்.100 கம்போர்ட் ஐ-டச் ஸ்டார்ட் அறிமுகம்- Dinamani

சுடச்சுட

    

    கோவை: டி.வி.எஸ். எக்ஸ்.எல்.100 கம்போர்ட் ஐ-டச் ஸ்டார்ட் அறிமுகம்

    By DIN  |   Published on : 16th October 2019 05:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tvs

    டி.வி.எஸ். எக்ஸ்.எல். 100 கம்போர்ட் ஐ-டச் ஸ்டார்ட் வாகனத்தை அறிமுகப்படுத்திய டி.வி.எஸ். நிறுவனத்தின் துணைத் தலைவர் எஸ்.வைத்தியநாதன்.


    டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் எக்ஸ்.எல். 100 கம்போர்ட் ஐ-டச் ஸ்டார்ட் வாகனம்  கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
     இந்த வாகனத்தை டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் துணைத் தலைவர் (பயன்பாட்டு வாகனங்கள் பிரிவு) எஸ்.வைத்தியநாதன் அறிமுகப்படுத்தி பேசியதாவது: 
    இந்தியாவில் சுமார் 1.25 கோடி பேர் டி.வி.எஸ். நிறுவனத்தின் வாகனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப புதிய மாறுதல்களைப் புகுத்தி வருகிறோம்.  அந்த வகையில், ஆட்டோமேடிக் கியர் உடன் இலகுவான எடை கொண்ட கம்போர்ட் ஐ-டச் வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்.,இதில், ஐ-டச் ஸ்டார்ட், மொபைல் சார்ஜிங் வசதி, சிங்க் பிரேக்கிங் தொழில்நுட்பம், ஹைட்ராலிக் சஸ்பென்ஷனுடன் எல்.இ.டி. முகப்பு விளக்கு, நீண்ட - வசதியான இரட்டை வண்ண இருக்கை, குஷன் பேக் ரெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. 
    99.7 சி.சி. திறனுடன் நான்கு ஸ்ட்ரோக் என்ஜின் கொண்ட இந்த வாகனம், சிறப்பான பிக் அப்புடன் வலுவான செயல்திறனும் கொண்டது. கூல் மின்ட் நீலம், லஸ்டர் கோல்டு, ஸ்பார்க்ளிங் சில்வர் என்ற மூன்று தனித்துவமான வண்ணங்களில் ரூ.41,619 என்ற ஆரம்ப விலையில் (எக்ஸ் ஷோரூம்) கிடைக்கிறது என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai