பிஎன்பி ஹவுஸிங் பைனான்ஸ் லாபம் ரூ.366 கோடி
By DIN | Published on : 25th October 2019 01:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

பிஎன்பி ஹவுஸிங் பைனான்ஸ் இரண்டாம் காலாண்டில் ரூ.366.8 கோடியை நிகர லாபமாக ஈட்டியது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.2,230.34 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதேகாலகட்டத்தில் ஈட்டிய வருவாயான ரூ.1,808.26 கோடியுடன் ஒப்பிடும்போது அதிகமாகும்.
நிகர லாபம் ரூ.253 கோடியிலிருந்து 45 சதவீதம் அதிகரித்து ரூ.366.8 கோடியாக இருந்தது.
செப்டம்பர் 30-ஆம் தேதி நிலவரப்படி மொத்த வாராக் கடன் விகிதம் 0.45 சதவீதத்திலிருந்து உயர்ந்து 0.84 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 0.35 சதவீதத்திலிருந்து அதிகரித்து 0.65 சதவீதமாகவும் இருந்தது என பிஎன்பி ஹவுஸிங் தெரிவித்துள்ளது.