தேர்தல் முடிவுகள் எதிரொலி: பங்குச் சந்தைகளில் மந்தநிலை

தேர்தல் முடிவுகள் எதிரொலியால் இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் மந்தமாகவே காணப்பட்டது.
தேர்தல் முடிவுகள் எதிரொலி: பங்குச் சந்தைகளில் மந்தநிலை


தேர்தல் முடிவுகள் எதிரொலியால் இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் மந்தமாகவே காணப்பட்டது.
மகாராஷ்டிரம், ஹரியாணா மாநிலங்களில் பதிவான வாக்குகள் வியாழக்கிழை எண்ணப்பட்டன. இதில், மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. அதேசமயம், ஹரியாணாவில் ஆட்சியமைப்பது யார் என்பதில் நிச்சயமற்ற சூழல் காணப்பட்டது.
தேர்தல் முடிவுகளை கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, முதலீட்டாளர்கள் தொலைத்தொடர்பு மற்றும் வங்கி துறையைச் சேர்ந்த பங்குகளை லாப நோக்கம் கருதி விற்பனை செய்தனர்.
யெஸ் வங்கி, எஸ்பிஐ, இன்டஸ்இண்ட் வங்கி பங்குகளின் விலை 5.76 சதவீதம் வரை சரிந்தன. அதேசமயம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்சிஎல் டெக், ஏஷியன் பெயின்ட்ஸ், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் பங்குகளின் விலை 3.12 சதவீதம் வரை உயர்ந்தன. 
எதிர்பார்ப்பிற்கு மாறாக சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள பார்தி ஏர்டெல் பங்கின் விலை அதிகபட்ச அளவாக 3.31 சதவீதம் வரை உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 38 புள்ளிகள் சரிந்து 39,020 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 21 புள்ளிகள் குறைந்து 11,582 புள்ளிகளாக நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com