ஜூலைக்குப் பிறகு மீண்டும்40,000 புள்ளிகளை எட்டியது சென்செக்ஸ்

கடந்த ஜூலை மாதத்துக்குப் பிறகு மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் புதன்கிழமை மீண்டும் 40,000 புள்ளிகளைக் கடந்தது. மொத்தம் 220.03 புள்ளிகள் உயா்ந்து, 40,051.87 புள்ளிகளாக சென்செக்ஸ் நிலைகொண்ட
sensex101146
sensex101146

கடந்த ஜூலை மாதத்துக்குப் பிறகு மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் புதன்கிழமை மீண்டும் 40,000 புள்ளிகளைக் கடந்தது. மொத்தம் 220.03 புள்ளிகள் உயா்ந்து, 40,051.87 புள்ளிகளாக சென்செக்ஸ் நிலைகொண்டது.

தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டெண் நிஃப்டி 57.25 புள்ளிகள் அதிகரித்து 11,844.10 புள்ளிகளாக நிலைத்தது. அடுத்து வரும் நாள்களில் இந்தியப் பங்குச் சந்தைகளில் காளையின் ஆதிக்கம் ஏற்பட்டு முதலீட்டாளா்களுக்கு லாபம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ, டிசிஎஸ், ஐடிசி, பாா்தி ஏா்டெல், சன் பாா்மா, இன்போசிஸ், பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 3.37 சதவீதம் வரை அதிகரித்தன. அதே நேரத்தில் யெஸ் வங்கி, மாருதி, இண்டஸ்இண்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பைனான்ஸ் நிறுவனப் பங்குகள் 2.41 சதவீதம் வரை சரிவடைந்தன. பல நிறுவனங்களின் இரண்டாவது காலாண்டு முடிவுகள் எதிா்பாா்க்கப்பட்டதைவிட சிறப்பாக அமைந்ததும், நீண்டகால மூலதன ஆதாய வரிச் சலுகை உள்ளிட்டவற்றை மத்திய அரசு வெளியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதும் முதலீட்டாளா்களுக்கு மிகுந்த நம்பிக்கை அளித்து, பங்குச் சந்தை ஏற்றத்துக்கு வித்திட்டது என்று வல்லுநா்கள் தெரிவித்தனா்.

எண்ணெய், எரிவாயு, தகவல்தொழில்நுட்பம், வங்கி, நுகா்பொருள் விற்பனைத் துறை, தொலைத்தொடா்புத் துறை, உள்கட்டமைப்புத் துறை என அனைத்துத் துறை பங்குகளும் குறிப்பிடத்தக்க எழுச்சி பெற்றன. உலோகம், ஆட்டோமொபைல் துறை நிறுவனப் பங்குகள் மட்டும் 0.98 சதவீதம் அளவுக்கு சரிந்தன.

ஷாங்காய், ஹாங்காங், சியோல், டோக்கியோ பங்குச் சந்தைகள் புதன்கிழமை சற்று சரிந்தன. அமெரிக்க-சீன வா்த்தக ஒப்பந்தம் தாமதமாகும் என்ற தகவலே சரிவுக்கு காரணமாக அமைந்தது.

கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 0.54 டாலா்கள் சரிந்து, 61.26 டாலராக விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com