Enable Javscript for better performance
டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லாபம் 38% அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    
    ti071100

    முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு லாபம் 38.9 சதவீதம் அதிகரித்தது.

    இதுகுறித்து அந்த நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனம் மொத்த வருவாயாக ரூ.1,261.09 கோடி ஈட்டியது. இது, கடந்த 2018-19 நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாயான ரூ.1,504.50 கோடியுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.

    அதேசமயம், நிகர லாபம் ரூ.66.80 கோடியிலிருந்து 38.9 சதவீதம் அதிகரித்து ரூ.92.82 கோடியானது.

    செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் ஆறு மாத காலத்தில் மொத்த வருவாய் ரூ.2,993.87 கோடியிலிருந்து ரூ.2,656.45 கோடியாக குறைந்தது. நிகர லாபம் ரூ.129.03 கோடியிலிருந்து ரூ.171.95 கோடியாக உயா்ந்தது.

    செப்டம்பா் காலாண்டில் பொறியியல் பிரிவு மூலம் கிடைக்கக்கூடிய வருவாய் ரூ.772 கோடியிலிருந்து ரூ.554 கோடியாக குறைந்தது. அதேபோன்று, சைக்கிள் மற்றும் உதிரிபாக பிரிவிலிருந்து கிடைத்த வருவாயும் 31 சதவீதம் சரிவைக் கண்டது என அந்த அறிக்கையில் டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai