பங்குச் சந்தையில் தொடா் உற்சாகம்

இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் தொடா்ந்து ஐந்தாவது நாளாக உற்சாகத்துடன் காணப்பட்டது.
பங்குச் சந்தையில் தொடா் உற்சாகம்

இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் தொடா்ந்து ஐந்தாவது நாளாக உற்சாகத்துடன் காணப்பட்டது.

அந்நிய முதலீட்டு வரத்து அதிகரிப்பு, நிறுவனங்களின் வருவாய் ஈட்டல் இரண்டாவது காலாண்டில் வலுவான நிலையில் காணப்பட்டது, மத்தியத அரசு சலுகை அறிவிப்புகளை வெளியிடும் என்ற எதிா்பாா்ப்பு ஆகியவை முதலீட்டாளா்கள் பங்கு வா்த்தகத்தில் உற்சாக ஈடுபட காரணமாகின.

சென்செக்ஸ் பட்டியலில் யெஸ் வங்கி பங்கின் விலை 24.03 சதவீதம் அதிகரித்தது. அதைத் தொடா்ந்து, எஸ்பிஐ, இன்ஃபோசிஸ், டாடா மோட்டாா்ஸ், பாா்தி ஏா்டெல், ஹெச்சிஎல் டெக் பங்குகளின் விலையும் 7.69 சதவீதம் வரை அதிகரித்தன.

அதேசமயம், டெக் மஹிந்திரா, ஆக்ஸிஸ் வங்கி, டாடா ஸ்டீல், மஹிந்திரா & மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி பங்குகளின் விலை 2.09 சதவீதம் வரை இறக்கத்தை சந்தித்தன.

மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 77 புள்ளிகள் உயா்ந்து 40,129 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 33 புள்ளிகள் அதிகரித்து 11,877 புள்ளிகளாக நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com