சுடச்சுட

  

  இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு கடன் இருமடங்கு உயர்வு

  By DIN  |   Published on : 03rd September 2019 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  cash


  இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு கடன் கடந்த ஜூலை மாதத்தில் இருமடங்கு உயர்ந்துள்ளது.
  இதுகுறித்து ரிசர்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்தாண்டு ஜூலையில் இந்திய நிறுவனங்கள் 218 கோடி டாலர் மதிப்பிலான கடன்களை திரட்டியிருந்தன. நடப்பாண்டு ஜூலையில் இது இருமடங்கு அதிகரித்து 498 கோடி டாலரை எட்டியுள்ளது.
  உள்நாட்டு நிறுவனங்கள் திரட்டிய மொத்த கடனில், 337 கோடி டாலர் மதிப்பிலான கடன் முன் அனுமதி தேவைப்படாத ஆட்டோமேட்டிக் வழிமுறையிலும், 156 கோடி டாலர் மதிப்பிலான கடன் அனுமதியுடன் பெறக்கூடிய அப்ரூவல் வழிமுறையிலும் திரட்டப்பட்டுள்ளன. எஞ்சிய 5 கோடி டாலர் மதிப்பிலான கடன் மசாலா பாண்டு அல்லது ரூபாய் மதிப்பில் வெளியிடப்பட்ட கடன்பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்டது என அந்தப் புள்ளிவிவரத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai