சுடச்சுட

  

  ஐடிபிஐ வங்கிக்கு ரூ.9,300 கோடி மூலதனம்: அமைச்சரவை ஒப்புதல்

  By DIN  |   Published on : 04th September 2019 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  idbi-bank


  ஐடிபிஐ வங்கிக்கு ரூ.9,300 கோடி மூலதனம் அளிக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை குழு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியது.
  இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:
  உரிய நேரத்தில் ஐடிபிஐ வங்கிக்கு வழங்கப்படும் இந்த நிதி உதவி அதன் அடிப்படை மூலதனத்தை மேம்படுத்த உதவும். இதன் மூலம், செயல்பாடுகள் மேம்பட்டு அந்த வங்கி லாப பாதைக்கு திரும்பும். மேலும், அவ்வங்கியின் கடன் வழங்கும் நடவடிக்கைகளும் வழக்கமான அளவில் வேகமெடுக்கும்.
  வழங்கப்படவுள்ள மொத்த தொகையான ரூ.9,300 கோடியில், எல்ஐசி அவ்வங்கியில் 51 சதவீத பங்குகளை வைத்துள்ளதற்காக ரூ.4,743 கோடி அதனை சாரும்.
  எஞ்சிய ரூ.4,557 கோடியை,  49 சதவீத பங்குகளை வைத்துள்ளதற்காக மத்திய அரசு ஒரே தவணையில் வழங்கும் என்றார் அவர்.
  ஐடிபிஐ வங்கியில் மத்திய அரசு வைத்திருந்த பங்கு மூலதனத்தை 86 சதவீதத்திலிருந்து 46.46 சதவீதமாக குறைத்துக் கொண்டது. அதேசமயம், நடப்பாண்டு ஜனவரியில், அந்த வங்கியில் எல்ஐசி தனது பங்கு மூலதனத்தை 51 சதவீதமாக அதிகரித்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai