சுடச்சுட

  
  bajaj


  பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஆகஸ்ட் மாத வாகன விற்பனை 11 சதவீதம் குறைந்தது.
  இதுகுறித்து அந்த நிறுவனம் செபி-யிடம் அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
  பஜாஜ் ஆட்டோ சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 3,90,026 வாகனங்களை விற்பனை செய்தது. இது, கடந்த ஆண்டின் இதே கால அளவில் விற்பனையான 4,37,092 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 11 சதவீதம் குறைவாகும்.
  உள்நாட்டு சந்தையில் வாகன விற்பனை 19 சதவீதம் சரிந்து 2,08,109-ஆக காணப்பட்டது.
   மொத்த மோட்டார்சைக்கிள் விற்பனை 3,62,923 என்ற எண்ணிக்கையிலிருந்து 10 சதவீதம் குறைந்து 3,25,300-ஆக இருந்தது. அதேபோன்று, மொத்த வர்த்தக வாகனங்கள் விற்பனையும் 74,169 என்ற எண்ணிக்கையிலிருந்து 13 சதவீதம் சரிந்து 64,726-ஆனது.
  அதேசமயம், ஆகஸ்ட் மாதத்தில் நிறுவனத்தின் வாகன ஏற்றுமதி 1,81,461 என்ற எண்ணிக்கையிலிருந்து சற்று அதிகரித்து 1,81,917-ஆக காணப்பட்டது என அந்த அறிக்கையில் பஜாஜ் ஆட்டோதெரிவித்துள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai