சுடச்சுட

  
  GOLD-BUYING

  இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த மாதம் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 42,860 கோடி டாலராக (ரூ.30.70 லட்சம் கோடி) சரிந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
   இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த மாதம் 23-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 145 கோடி டாலர் சரிந்து (ரூ.10,388 கோடி) சரிந்து 42,905 கோடி டாலராக (சுமார் ரூ.30.73 லட்சம் கோடி) இருந்தது.
   இந்த நிலையில், கடந்த மாதம் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அது மேலும் 44.6 கோடி டாலர் (சுமார் ரூ.3,195 கோடி) குறைந்து 42,860 கோடி டாலராகக் குறைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் அந்நியச் செலவாணி கையிருப்பது இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைந்தபட்ச அளவைத் தொட்டது.
   தங்கத்தின் கையிருப்பு 68.2 கோடி டாலர் (சுமார் ரூ.4,886 கோடி) குறைந்து 2,755 கோடி டாலராக (சுமார் ரூ.1.97 லட்சம் கோடி) உள்ளது என்று அந்த புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai