சுடச்சுட

  

  பங்குச் சந்தைகளில் முன்னேற்றம்: சென்செக்ஸ் 164 புள்ளிகள் உயர்வு

  By DIN  |   Published on : 10th September 2019 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sensex


  ஆசியப் பங்குச் சந்தை வளர்ச்சியின் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை முன்னற்றம் காணப்பட்டது. 
  இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
  36,982 சென்செக்ஸ் புள்ளிகளுடன் திங்கள்கிழமை தொடங்கிய மும்பை பங்குச் சந்தை வர்த்தகம், தொடக்கத்தில் 36,784 புள்ளிகள் வரை வீழ்ந்தாலும், அதிலிருந்து விறுவிறுவென 460 புள்ளிகள் வரை முன்னேறியது. வர்த்தக இறுதியில் 37,146 புள்ளிகளுடன் நிலைத்தது. இது, முந்தைய தினத்தைவிட 164 புள்ளிகள் (0.44 சதவீதம்) அதிகமாகும்.
  தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான  நிஃப்டியும், திங்கள்கிழமை 57 புள்ளிகள் (0.52 சதவீதம்) அதிகரித்து 11,003 புள்ளிகளாக நிலைத்தது.
  பெரும்பாலான ஆசிய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை வளர்ச்சியைக் கண்டன. இது முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தியதால் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai