சுடச்சுட

    

    நாட்டின் பொருள்கள் ஏற்றுமதி ரூ.5.82 லட்சம் கோடியாக அதிகரிக்கும்: எக்ஸிம் வங்கி

    By DIN  |   Published on : 11th September 2019 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    நாட்டின் பொருள்கள் ஏற்றுமதி இரண்டாவது காலாண்டில் ரூ.5.82 லட்சம் கோடியாக (8,200 கோடி டாலர்) அதிகரிக்கும் என இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி  (எக்ஸிம் வங்கி) தெரிவித்துள்ளது.
    இதுகுறித்து அந்த வங்கி மேலும் கூறியுள்ளதாவது:
    நடப்பு 201920ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருள்கள் ஏற்றுமதி 8,200 கோடி டாலராக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, கடந்த நிதியாண்டில் இதே கால அளவில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியான 8,140 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் 0.6 சதவீதம் அதிகமாகும்.
    அதேசமயம், எண்ணெய் சாரா பொருள்களின் ஏற்றுமதி 6,964 கோடி டாலரிலிருந்து 6,948 கோடி டாலராக சற்று குறைய வாய்ப்புள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இப்பொருள்களின் ஏற்றுமதி 0.2 சதவீத அளவுக்கு குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக எக்ஸிம் வங்கி தெரிவித்துள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai