அந்நியச் செலாவணி கையிருப்பில் 100 கோடி டாலர் அதிகரிப்பு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் செப்டம்பர் 6-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 100 கோடி டாலர் அதிகரித்துள்ளது. 
அந்நியச் செலாவணி கையிருப்பில் 100 கோடி டாலர் அதிகரிப்பு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் செப்டம்பர் 6-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 100 கோடி டாலர் அதிகரித்துள்ளது. 
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பர் 6-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 100 கோடி டாலர் (ரூ.7,000 கோடி) அதிகரித்து 42,960 கோடி டாலரை (ரூ.30.07  லட்சம் கோடி) எட்டியுள்ளது. அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு அதிகரித்ததையடுத்து செலாவணி கையிருப்பு கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. இது, முந்தைய வாரத்தில் 44 கோடி டாலர் குறைந்து 42,860 கோடி டாலராக காணப்பட்டது.
செப்டம்பர் 6-ஆம் தேதி வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய அங்கமாக உள்ள அந்நியச் செலாவணி சொத்துகள் 120 கோடி டாலர் உயர்ந்து 39,720 கோடி டாலராக இருந்தது. தங்கத்தின் கையிருப்பு 20 கோடி டாலர் குறைந்து 2,735 கோடி டாலரானது. சர்வதேச நிதியத்தில் எஸ்டிஆர் மதிப்பு மாற்றம் ஏதுமின்றி 143 கோடி டாலராகவும், நாட்டின் இருப்பு நிலை 20 லட்சம் டாலர் அதிகரித்து 362 கோடி டாலராகவும் இருந்தது என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில்தான் அந்நியச் செலாவணி கையிருப்பானது முன்னெப்போதும் இல்லாத அளவாக 43,057 கோடி டாலரை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com