சென்செக்ஸ் 261 புள்ளிகள் வீழ்ச்சி

சவூதி அரேபியாவின் கச்சா எண்ணெய் ஆலைகளில் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதன் எதிரொலியாக பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது.
சென்செக்ஸ் 261 புள்ளிகள் வீழ்ச்சி

சவூதி அரேபியாவின் கச்சா எண்ணெய் ஆலைகளில் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதன் எதிரொலியாக பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது.
சவூதி அரேபியாவின் முக்கிய கச்சா எண்ணெய் ஆலைகள், வயல்களில் ஆளில்லா விமானம் மூலம் யேமன் கிளர்ச்சியாளர்கள் சனிக்கிழமை தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியானது. இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு விலை மேலும் அதிகரிக்கும் என்ற நிலைப்பாடு முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்தது.
இதையடுத்து, லாப நோக்கு கருதி எண்ணெய்-எரிவாயு துறைகளைச் சேர்ந்த பங்குகளை முதலீட்டாளர்கள் விற்பனை செய்ததையடுத்து பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவு நிலைக்கு சென்றது. இந்த நிலையில், வர்த்தகப் போர் பதற்றம் தொடர்பான நிச்சயமற்ற தன்மையும் சந்தைகளில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது.
சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் வயல்களில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டதன் எதிரொலியாக, மும்பை பங்குச் சந்தையில் எண்ணெய்-எரிவாயு, எரிசக்தி துறை குறியீட்டெண்கள் முறையே 1.61 சதவீதம் மற்றும் 1.33 சதவீதம் குறைந்தன. இவை 
தவிர, நிதி, வங்கி, ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம், பொறியியல் சாதனங்கள் துறைகளைச் சேர்ந்த குறியீட்டெண்களும் பின்னடைவையே சந்தித்தன.
சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள மஹிந்திரா & மஹிந்திரா, எஸ்பிஐ, யெஸ் வங்கி, ஏஷியன் பெயின்ட்ஸ், எச்டிஎஃப்சி, டாடா ஸ்டீல், எல் & டி பங்குகள் 2.55 சதவீதம் வரை விலை குறைந்தன.
அதேசமயம், முதலீட்டாளர்களிடம் கிடைத்த வரவேற்பால், டெக்மஹிந்திரா, ஓஎன்ஜிசி, சன் பார்மா, ஹெச்யுஎல், டிசிஎஸ் மற்றும் பார்தி ஏர்டெல் பங்குகள் 1.44 சதவீதம் வரை விலை உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 261 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 37,123 புள்ளிகளில் நிலைத்தது. வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 356 புள்ளிகள் வரை சரிந்தது.   தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 72 புள்ளிகள் குறைந்து 11,003 புள்ளிகளில் நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com