தங்கம் பவுனுக்கு ரூ.288 உயர்வு

சென்னையில் கடந்த ஒரு வாரமாக  குறைந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை கணிசமாக உயர்ந்தது. ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.288 உயர்ந்து, ரூ.28,960-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
தங்கம் பவுனுக்கு ரூ.288 உயர்வு

சென்னையில் கடந்த ஒரு வாரமாக  குறைந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை கணிசமாக உயர்ந்தது. ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.288 உயர்ந்து, ரூ.28,960-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்ட  நிலையில், கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை குறைந்து வந்தது.  இந்நிலையில், சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்தது. பவுனுக்கு ரூ.288 உயர்ந்து, ரூ.28,960-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.36 உயர்ந்து, ரூ.3,620-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுபோல, வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.60 உயர்ந்து ரூ.50.30 ஆகவும், கட்டிவெள்ளி  கிலோவுக்கு ரூ.1,600 உயர்ந்து, ரூ.50,300 ஆக இருந்தது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம்    3,620
1 பவுன் தங்கம்    28,960
1 கிராம் வெள்ளி    50.30
1 கிலோ வெள்ளி    50,300 

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம்    3,584
1 பவுன்  தங்கம்    28,672
1 கிராம் வெள்ளி    48.70
1 கிலோ வெள்ளி    48,700

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com