முந்த்ரா துறைமுகத்திலிருந்து மாருதி சுஸுகியின் ஏற்றுமதி 10 லட்சத்தை தாண்டியது

குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 10 லட்சம் என்ற மைல்கல்லைத் தாண்டியுள்ளதாக மாருதி சுஸுகி இந்தியா தெரிவித்துள்ளது.
முந்த்ரா துறைமுகத்திலிருந்து மாருதி சுஸுகியின் ஏற்றுமதி 10 லட்சத்தை தாண்டியது

குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 10 லட்சம் என்ற மைல்கல்லைத் தாண்டியுள்ளதாக மாருதி சுஸுகி இந்தியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான கெனிச்சி அயுகவா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
முந்த்ரா துறைமுகத்தில் ஏற்றுமதியை தொடங்கிய 10 ஆண்டுகளுக்குள் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. அந்த துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கார்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 10 லட்சத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது.
மாறிவரும் சந்தை சூழல்களுக்கு ஏற்ற வகையிலான வேகத்தை தக்கவைத்துக் கொள்ள ஏற்றுமதி வியூகங்களை நிறுவனம் அவ்வப்போது சீரமைத்து வருகிறது என்றார் அவர்.
மாருதி சுஸுகி நிறுவனம் முந்த்ரா துறைமுகத்திலிருந்து, லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கு கார் ஏற்றுமதியை மேற்கொண்டு வருகிறது. 125-க்கும் மேற்பட்ட நாடுகளில் கார் விற்பனையை மேற்கொண்டு வரும் அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஏற்றுமதி ஏற்கெனவே 18 லட்சத்தை கடந்து விட்டது.
தற்போதைய நிலையில், ஆல்டோ கே10, செலிரியோ, பலோனோ, இக்னிஸ், டிசையர் உள்ளிட்ட 14 மாடல் கார்களை சர்வதேச சந்தையில் மாருதி சுஸுகி விற்பனை செய்து வருகிறது. முந்த்ரா தவிர, மும்பை துறைமுகத்திலிருந்தும் இந்நிறுவனம் ஏற்றுமதியை மேற்கொண்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com