அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களில் 1.4 லட்சம் தற்காலிக வேலைவாய்ப்புகள்

பண்டிகை கால விற்பனை தொடங்கவுள்ள நிலையில், அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் 1.4 லட்சம் பேருக்கு தற்காலிக பணிவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களில் 1.4 லட்சம் தற்காலிக வேலைவாய்ப்புகள்

பண்டிகை கால விற்பனை தொடங்கவுள்ள நிலையில், அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் 1.4 லட்சம் பேருக்கு தற்காலிக பணிவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
இதுகுறித்து அமேசான் நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "பண்டிகை கால விற்பனை இம்மாத கடைசியில் தொடங்க உள்ளது. எனவே, கிடங்கு மையங்கள், வகை பிரிப்பு மையங்கள், விநியோக நிலையங்கள், பங்குதாரர் கிடங்கு அமைப்புகள், வாடிக்கையாளர் சேவை இடங்கள் என 90,000-க்கும் மேற்பட்டோருக்கு தற்காலிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளது.
அதேபோன்று, வால்மார்ட்டுக்கு சொந்தமான பிளிப்கார்ட் நிறுவனமும், விநியோக சங்கிலித் தொடர், சரக்குப்போக்குவரத்து கிளைகள் மற்றும் வாடிக்கையாளர் ஆதரவு என பல்வேறு பணிகளில் ஈடுபட 50,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்கியுள்ளதாக கூறியுள்ளது.
குறிப்பாக, இந்த வேலைவாய்ப்புகள், மும்பை, தில்லி, ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, அகமதாபாத் மற்றும் புனே நகரங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் பண்டிகைகால விற்பனை உதவியாளர்களின் எண்ணிக்கையை இணையவழி வர்த்தக நிறுவனங்கள் இருமடங்கு அதிகரித்துள்ளன.
மேலும், வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக சேவை மையங்கள் 11 நகரங்களில் உருவாக்கப்பட்டுள்ளதாக ஃபிளிப்கார்ட் கூறியுள்ளது. இவை, மின்னஞ்சல், சமூக வலைதளம் மற்றும் செல்லிடப்பேசி வழியாக கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com