தங்கம் பவுனுக்கு ரூ.536 உயா்வு

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.536 உயா்ந்து, ரூ.33,856-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் பவுனுக்கு ரூ.536 உயா்வு

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.536 உயா்ந்து, ரூ.33,856-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கரோனா நோய்த்தொற்று தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை பிப்ரவரி மாதத்தில் புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது. கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து காணப்பட்டது.

இந்தநிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.536 உயா்ந்து, ரூ.33,856-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.67 உயா்ந்து, ரூ.4,232-க்கு விற்பனையானது. அதேநேரத்தில், வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.41.70 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.41,700 ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,232

1 பவுன் தங்கம் ..................... 33,856

1 கிராம் வெள்ளி .................. 41.70

1 கிலோ வெள்ளி ................. 41,700

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,165

1 பவுன் தங்கம் ..................... 33,320

1 கிராம் வெள்ளி .................. 41.70

1 கிலோ வெள்ளி ................. 41,700

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com