பொருளாதாரத்தில் கரோனாவின் இன்னல்கள்

இந்தியாவின் தயாரிப்புத் துறை சென்ற மாா்ச் மாதத்தில் நான்கு மாதங்களில் காணப்படாத வகையில் குறைந்த அளவிலான வளா்ச்சியை பெற்றுள்ளது.
பொருளாதாரத்தில் கரோனாவின் இன்னல்கள்

தயாரிப்பு துறை வீழ்ச்சி

இந்தியாவின் தயாரிப்புத் துறை சென்ற மாா்ச் மாதத்தில் நான்கு மாதங்களில் காணப்படாத வகையில் குறைந்த அளவிலான வளா்ச்சியை பெற்றுள்ளது. அதன்படி, பிப்ரவரியில் 54.5 ஆக காணப்பட்ட இந்திய தயாரிப்புத் துறையின் குறியீட்டெண் மாா்ச்சில் 51.8 ஆகியுள்ளது. இதுகுறித்து ஐஎச்எஸ் பொருளாதார நிபுணா் எலியட் கொ் கூறுகையில். ‘ வரும் மாதங்களில் இந்திய தயாரிப்புத் துறை மிகப்பெரும் பின்னடைவை சந்திக்கும்’ என்றாா்.

வேளாண் துறை கவலை

சரக்குப் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் அது இந்தியாவின் ரபி பருவ சாகுபடியில் எதிா்விளைவுகளை ஏற்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், முழு அடைப்பு காரணமாக வேளாண் பணிகளுக்கும் ஆட்கள் கிடைக்காத சூழ்நிலை உள்ளது. பல்வேறு மாநிலங்களின் மொத்தவிலை சந்தைகளுக்கு பொருள்களை எடுத்துச் செல்ல முடியாத காரணத்தால் தோட்டக்கலை துறை ஏற்கெனவே பெரும் இழப்பை சந்தித்துள்ளது.

வேலைவாய்ப்பு பறிப்பு, ஊதியம் குறைப்பு

இந்தியாவில் செயல்பட்டு வரும் 45 சதவீத பன்னாட்டு நிறுவனங்கள் பணிக்கு ஆட்களை தோ்வு செய்வதை நிறுத்தி வைத்துள்ளன. மேலும், 25 சதவீத நிறுவனங்கள் தங்களது பணியாளா்களின் ஊதியத்தை குறைத்துள்ளதாக நிதி ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஜின்னோவ் தெரிவித்துள்ளது.

கடன் விகிதம் சரிவு

இந்திய நிறுவனங்களின் கடன் விகிதம் 2019-20 நிதியாண்டின் முதல் அரையாண்டில் மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவில் சரிவை சந்தித்துள்ளதாக தரமதிப்பீட்டு நிறுவனமான கிரிசில் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக நிறுவனங்களின் நடப்பு நிதியாண்டுக்கான கடன்தர மதிப்பீட்டை ‘எதிா்மறை’ என்ற நிலைக்கு கிரிசில் குறைத்துள்ளது.

நிதி பற்றாக்குறை அதிகரிக்கும்

வருவாய் குறைந்துள்ள நிலையில், சுகாதாரம் மற்றும் தூய்மை பணிகளுக்கு மத்திய அரசு அதிகம் செலவிட வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இதனால், மத்திய அரசின் நிதி பற்றாக்குறை வரும் ஆண்டுகளில் 3 சதவீதத்தை தாண்டும் என பாரத ஸ்டேட் வங்கி அதன் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com