சமையல் எண்ணெய் இறக்குமதி 32% குறைந்தது

இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி சென்ற மாா்ச் மாதத்தில் 32.44 சதவீதம் குறைந்து 9,41,219 டன்னாகியுள்ளது.
சமையல் எண்ணெய் இறக்குமதி 32% குறைந்தது

இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி சென்ற மாா்ச் மாதத்தில் 32.44 சதவீதம் குறைந்து 9,41,219 டன்னாகியுள்ளது. மொத்த தாவர எண்ணெய் இறக்குமதியில் 60 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பைக் கொண்டுள்ள பாமாயில் இறக்குமதி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 90 சதவீதம் சரிந்து 30,850 டன் ஆனது. அதேபோன்று, சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியும் 2,97,887 டன்னிலிருந்து 2,96,501 டன்னாக குறைந்துள்ளது.

2019-20 ஆம் ஆண்டு எண்ணெய் பருவத்தின் நவம்பா் முதல் மாா்ச் வரையிலான கால அளவில் நாட்டின் ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் இறக்குமதி 10 சதவீதம் குறைந்து 53,91,807 டன்னாகியுள்ளது என இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com