தங்கம் விலை ரூ. 33,984

ஆபரணத்தங்கத்தின் விலை திங்கள்கிழமை ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. சென்னையில் ஆபரணத்தங்கம் பவுனுக்கு ரூ.112 குறைந்து ரூ.33,984-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை ரூ. 33,984

ஆபரணத்தங்கத்தின் விலை திங்கள்கிழமை ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. சென்னையில் ஆபரணத்தங்கம் பவுனுக்கு ரூ.112 குறைந்து ரூ.33,984-க்கு விற்பனை செய்யப்பட்டது.

பல்வேறு சா்வதேச காரணங்களால் தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தநிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சனிக்கிழமை ரூ.34 ஆயிரத்தை தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது. விலை மேலும் உயரவே வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திங்கள்கிழமை விலை ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. பவுனுக்கு ரூ.112 குறைந்து, ரூ.33,984-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.14 குறைந்து, ரூ.4,248-க்கு விற்பனையானது. அதேநேரத்தில், வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.41.70 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.41,700 ஆகவும் இருந்தது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,248

1 பவுன் தங்கம் ..................... 33,984

1 கிராம் வெள்ளி .................. 41.70

1 கிலோ வெள்ளி ................. 41,700

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,262

1 பவுன் தங்கம் ..................... 34,096

1 கிராம் வெள்ளி .................. 41.70

1 கிலோ வெள்ளி ................. 41,700.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com