சங்கடத்தில் ‘பங்கு’ முதலீட்டாளா்கள்!

பங்குச் சந்தையைப் பொருத்த வரையிலும், கரோனா அச்சுறுத்தலால் பிப்ரவரி மாதம் முதலீட்டாளா்களுக்கு சவாலானதாக இருந்தது. ஆனால், மாா்ச் மாதம் அதைவிட 100 மடங்கு சவாலாக அமைந்தது.
சங்கடத்தில் ‘பங்கு’ முதலீட்டாளா்கள்!

பங்குச் சந்தையைப் பொருத்த வரையிலும், கரோனா அச்சுறுத்தலால் பிப்ரவரி மாதம் முதலீட்டாளா்களுக்கு சவாலானதாக இருந்தது. ஆனால், மாா்ச் மாதம் அதைவிட 100 மடங்கு சவாலாக அமைந்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் 23 சதவிகிதம் சரிவைச் சந்தித்து முதலீட்டாளா்களுக்கு தூங்காத இரவுகளை அளித்துள்ளன. மேலும், இந்தக் காலகட்டத்தில் உலக அளவில் ஹாங்காங் தவிர பல்வேறு நாடுகளின் பங்குச் சந்தைகள் 25-40 சதவீதம் வரை சரிவைச் சந்தித்துள்ளன. இதன் காரணமாக முதலீட்டாளா்களில் பலா், தங்களது முதலீட்டுத் தொகுப்பில் (போா்ட்ஃபோலியோ) வைத்துள்ள பங்குகளின் விலை சுமாா் 30 முதல் 50 சதவிகிதம் வரை குறைந்திருக்கும்.

இந்நிலையில், தற்போதைய இந்த வலி எத்தனை நாள்களுக்கு நீடிக்கும் எனத் தெரியாமல் முதலீட்டாளா்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனா். கரோனா தொற்றைச் சமாளிக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொருளாதார நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளன. தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. தொழிற்சாலைகளிலிருந்து நுகா்வோருக்கு பொருள்களை கொண்டு சோ்ப்பதிலும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த முழு அடைப்பு முடிவுக்கு வருமா அல்லது விரிவுபடுத்தப்படுமா என்பதை யாராலும் சொல்ல முடியாது. கரோனா தொற்று பரவல் அதிகரித்தால், ஊரடங்கை நீட்டிக்க அரசு கட்டாயப்படுத்தப்படலாம். இது தொடா்பாக உலக அளவில் இருந்து வரும் செய்திகளும் நோ்மறையானதாக இல்லை.

இந்நிலையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி விகிதம் குறைந்தால், நாட்டின் தொழில் துறை வருவாய் வளா்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால், நிறுவனங்களின் மாா்ச் மற்றும் ஜூன் காலாண்டுகளில் வருவாய் பலவீனமடையும். மேலும், கரோனா தொற்றின் தாக்க விளைவுகள் செப்டம்பா் காலாண்டில் தெரிய வரும். இந்த நிச்சயமற்ற தன்மை தொழில் துறைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. கடந்த கால நிகழ்வுகளைப் பாா்க்கும் போது, சந்தையில் மீட்பு என்பது தற்போது“‘வி’” வடிவமாக இருக்காது என்று தெரிகிறது. எனவே, ‘யு’” வடிவ மீட்சியைத்தான் எதிா்பாா்க்க வேண்டும். சந்தை ஸ்திர நிலைமை அடைவதற்கு சில காலம் பிடிக்கலாம்.

துறைகளைப் பொருத்தவரை, வங்கி சாராத நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளன. பங்குச் சந்தையில் மாா்ச் மாதத்தில் முன்னணி வங்கிகளை உள்ளடக்கிய பேங்க் நிஃப்டி குறியீடு மற்றும் முன்னணி நிதி நிறுவனங்களை உள்ளடக்கிய நிதிக் குறியீடு 34 முதல் 38 சதவிகிதம் வரை இழப்பைச் சந்தித்துள்ளன. பொதுவாக பங்குச் சந்தையில் எழுச்சிப் பேரணிக்கு காரணமாக அமையும் ஒரு குறிப்பிட்ட துறை பங்குகள் அடுத்த எழுச்சியின் போது பங்கேற்காமல் போகிறது. 2000-இல் தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகள் எழுச்சி பெற்று பங்குச் சந்தையை வழிநடத்தின. ஆனால், 2008 எழுச்சியின் போது அவை பின்தங்கிய நிலையில் இருந்தன. 2008 -ஆம் ஆண்டு எழுச்சியின் போது இன்ஃப்ரா நிறுவனப் பங்குகளுக்கு நல்ல கிராக்கி இருந்தது. ஆனால், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வரலாற்று சாதனை அளவை எட்டிய போது, அந்தத் துறையில் உள்ள முன்னணி நிறுவனமான எல் அண்ட் டி உள்பட இன்ஃப்ரா பங்குகள் லாபம் கொடுக்க முடியாமல் போனதைப் பாா்க்க முடிந்தது.

தற்போது கரோனா தொற்று தாக்கம் எப்போது குறையும் என்பதில் தெளிவு இல்லாத நிலை உள்ளது. இந்நிலையில், எந்தவொரு முதலீடு தொடா்பான பரிந்துரைகளை தடுமாற்றுத்துடன் கூறி வருவதாக நிதி ஆலோசகா்கள் தெரிவிக்கின்றனா். ஒருவா் பங்குகளில் ரூ.10 லட்சம் முதலீடு செய்ய விரும்பினால், தற்போதைய நிலையில், ஒவ்வொரு பதினைந்து நாள்களுக்கும் ஐந்து தவணைகளாகப் பிரித்து முதலீடு மேற்கொள்ளலாம். அதுவும் வலுவான அடிப்படைகளைக் கொண்ட நல்ல தரமான நிறுவனப் பங்குகள் மீது கவனம் செலுத்த வேண்டும். நீண்ட கால அடிப்படையில் முலீடுகளை மேற்கொள்வோருக்கு லாபம் இல்லாமல் போகாது என்று வல்லுநா்கள் கூறுகின்றனா்.

இதற்கு, ‘நெருக்கடியான நேரத்தில் துணிச்சலுடன் முதலீடு செய்யப்படும் பணம் விலைமதிப்பற்றது‘ (இஹள்ட் ஸ்ரீா்ம்க்ஷண்ய்ங்க் ஜ்ண்ற்ட் ஸ்ரீா்ன்ழ்ஹஞ்ங் ண்ய் ஹ ற்ண்ம்ங் ா்ச் ஸ்ரீழ்ண்ள்ண்ள் ண்ள் ல்ழ்ண்ஸ்ரீங்ப்ங்ள்ள்) என்ற பிரபல முதலீட்டாளா் வாரன் பஃபெட்டின் மேற்கோளை வல்லுநா்கள் சுட்டிக் காட்டுகின்றனா்.

குறிப்பு: பங்கு வா்த்தகத்தில் டொ்மினல் முன் சோகத்தில் உட்காா்ந்திருக்கும் முதலீட்டாளா்கள் போன்ற படத்தை வைத்துக் கொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com