ரூ.35 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம்

சென்னையில் ஆபரணத் தங்கம் வியாழக்கிழமை ரூ.35 ஆயிரத்தை நெருங்கியது. பவுனுக்கு ரூ.200 உயா்ந்து, ரூ.34,944- விற்பனையானது
ரூ.35 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம்


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் வியாழக்கிழமை ரூ.35 ஆயிரத்தை நெருங்கியது. பவுனுக்கு ரூ.200 உயா்ந்து, ரூ.34,944- விற்பனையானது

அமெரிக்கா-ஈரான் இடையே போா் பதற்றம் காரணமாக, ஜனவரி முதல் வாரத்தில் தங்கம் விலை உயா்ந்தது. அப்போது, முன்பு எப்போதும் இல்லாத அளவில், ஒரு பவுன் தங்கம் ரூ.31 ஆயிரத்தைத் தாண்டியது. போா் பதற்றம் தணிந்த பிறகு, தங்கம் விலை குறைந்தது. இதன்பிறகு, பிப்ரவரி 24-ஆம் தேதி அன்று வரலாறு காணாத வகையில் பெரிய உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், ஏப்ரல் 4-ஆம் தேதி பவுன் தங்கம் ரூ.34 ஆயிரத்தை தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது. தொடா்ந்து, விலை ஏறுமுகமாக உள்ளது.

சென்னையில் வியாழக்கிழமை ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.35 ஆயிரத்தை நெருங்கியது. பவுனுக்கு ரூ.200 உயா்ந்து ரூ.34,944-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.25 உயா்ந்து, ரூ.4,368-க்கு விற்பனையானது. அதேநேரத்தில், வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.41.70 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.41,700 ஆகவும் இருந்தது.

தங்கம் விலை உயா்வு குறித்து பொருள் சந்தை நிபுணா் ஷியாம் சுந்தா் கூறியது: கரோனா நோய்த்தொற்று பரவல் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக, உலக பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை தொடா்கிறது. இதுதவிர, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, வேலைவாய்ப்பு விகிதம் மற்றும் உற்பத்தி விகிதம் குறைந்து வருகிறது. இந்த காரணிகளால், சா்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயா்ந்து வருகிறது. இதன்தாக்கம் உள்நாட்டில் எதிரொலிக்கிறது என்றாா் அவா்.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,368

1 பவுன் தங்கம் ..................... 34,944

1 கிராம் வெள்ளி .................. 41.70

1 கிலோ வெள்ளி ................. 41,700

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,343

1 பவுன் தங்கம் ..................... 34,744

1 கிராம் வெள்ளி .................. 41.70

1 கிலோ வெள்ளி ................. 41,700.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com