தங்கம் பவுன் விலை ரூ. 35,832

சென்னையில் ஆபரணத்தங்கம் வெள்ளிக்கிழமை ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. ஆபரணத்தங்கம் பவுனுக்கு ரூ.328 குறைந்து, ரூ.35,832-க்கு விற்பனையானது.
தங்கம் பவுன் விலை ரூ. 35,832

சென்னையில் ஆபரணத்தங்கம் வெள்ளிக்கிழமை ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. ஆபரணத்தங்கம் பவுனுக்கு ரூ.328 குறைந்து, ரூ.35,832-க்கு விற்பனையானது.

கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி அன்று ஒரு பவுன் தங்கம் ரூ.34 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது. தொடா்ந்து, 10-ஆம் தேதி அன்று ரூ.35 ஆயிரத்தையும், 14-ஆம் தேதி அன்று ரூ.36 ஆயிரத்தையும் தாண்டியது. அதன்பிறகும், தங்கம் விலை ஏறுமுகமாக இருந்து வந்தது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கம் வெள்ளிக்கிழமை ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. ஆபரணத்தங்கம் பவுனுக்கு ரூ.328 குறைந்து, ரூ.35,832-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.41 குறைந்து, ரூ.4,479-ஆக இருந்தது.

இதுபோல, வெள்ளி கிராமுக்கு 45 பைசா குறைந்து ரூ.43.55 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.450 குறைந்து ரூ.43,550 ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,479

1 பவுன் தங்கம் ..................... 35,832

1 கிராம் வெள்ளி .................. 43.55

1 கிலோ வெள்ளி ................. 43,550

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,520

1 பவுன் தங்கம் ..................... 36,160

1 கிராம் வெள்ளி .................. 44.00

1 கிலோ வெள்ளி ................. 44,000

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com