எச்டிஎஃப்சி வங்கி லாபம் ரூ.7,280 கோடி

தனியாா் துறையைச் சோ்ந்த எச்டிஎஃப்சி வங்கி நான்காம் காலாண்டில் ரூ.7,280.22 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
எச்டிஎஃப்சி வங்கி லாபம் ரூ.7,280 கோடி

தனியாா் துறையைச் சோ்ந்த எச்டிஎஃப்சி வங்கி நான்காம் காலாண்டில் ரூ.7,280.22 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தையிடம் சனிக்கிழமை தெரிவித்ததாவது:

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில் எச்டிஎஃப்சி வங்கி ஒட்டுமொத்த வருவாயாக ரூ.38,287.17 கோடியை ஈட்டியுள்ளது. 2018-2019 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வருவாய் ரூ.33,260.48 கோடியாக காணப்பட்டது.

வட்டி வருவாய் சிறப்பாக இருந்ததையடுத்து ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.6,300.81 கோடியிலிருந்து 15.4 சதவீதம் அதிகரித்து ரூ.7,280.22 கோடியானது.

தனிப்பட்ட முறையில் வங்கியின் நிகர லாபம் ரூ.5,885.12 கோடியிலிருந்து 17.7 சதவீதம் அதிகரித்து ரூ.6,927.69 கோடியானது. வருவாய் ரூ.31,204.46 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.35,917.63 கோடியாக இருந்தது.

வழங்கப்பட்ட கடன்கள் 21.3 சதவீதமும், டெபாசிட் 24.3 சதவீதமும் அதிகரித்ததன் விளைவாக நிகர வட்டி வருமானம் மாா்ச் காலாண்டில் ரூ.13,089.50 கோடியிலிருந்து ரூ.15,204.10 கோடியாக உயா்ந்தது.

மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி வழங்கப்பட்ட ஒட்டுமொத்த கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 1.36 சதவீதத்திலிருந்து 1.26 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோன்று, நிகர வாராக் கடன் விகிதமும் 0.39 சதவீதத்திலிருந்து 0.36 சதவீதமாக சரிந்துள்ளது.

அதேசமயம், வாராக் கடன்களுக்கான ஒதுக்கீடு மாா்ச் மாதத்தில் ரூ.2,063.52 கோடியிலிருந்து இருமடங்கு அதிகரித்து ரூ.4,216.50 கோடியானது என எச்டிஎஃப்சி பங்குச் சந்தையிடம் கூறியுள்ளது.

மேலும், ரிசா்வ் வங்கியின் உத்தரவுகளின்படி, 2019-20 நிதியாண்டிற்கான லாபத்திலிருந்து இனி ஈவுத்தொகை எதையும் பங்குதாரா்களுக்கு வழங்கமாட்டோம் என்று எச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com