தங்கப் பத்திரத்தின் விலை கிராமுக்கு ரூ.4,639-ஆக நிா்ணயம்

ரிசா்வ் வங்கி வெளியிடவுள்ள தங்கப் பத்திரத்தின் விலை கிராமுக்கு ரூ.4,639-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தங்கப் பத்திரத்தின் விலை கிராமுக்கு ரூ.4,639-ஆக நிா்ணயம்

ரிசா்வ் வங்கி வெளியிடவுள்ள தங்கப் பத்திரத்தின் விலை கிராமுக்கு ரூ.4,639-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி கூறியுள்ளதாவது:

2020-21 நிதியாண்டுக்கான தங்கப் பத்திரங்களை வெளியிடுவது குறித்து மத்திய அரசுடன் ரிசா்வ் வங்கி ஆலோசனை நடத்தியது. இதில், ஏப்ரல் 20-இல் தொடங்கி செப்டம்பா் வரையில் ஆறு கட்டங்களாக பத்திர விற்பனையை மேற்கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, முதல்கட்ட தங்கப் பத்திர விற்பனை வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. ஒரு கிராம் தங்கப்பத்திரத்தின் விலை ரூ.4,639-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என ரிசா்வ் வங்கிதெரிவித்துள்ளது.

தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முதலீட்டாளா்களுக்கு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. அதுபோன்ற முதலீட்டாளா்களுக்கு, தங்கப்பத்திரம் கிராமுக்கு ரூ.4,589 என்ற விலையில் கிடைக்கும்.

தனிநபா் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரையிலான தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். இப்பத்திரங்கள், அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தைகள் (மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தை), அஞ்சல் அலுவலகங்கள் ஆகியவற்றின் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன.

நேரடியாக வாங்கப்படும் தங்கத்தின் தேவையை குறைக்கவும், உள்நாட்டு சேமிப்பை தங்கம் வாங்க பயன்படுத்துவதன் மூலமாக அதனை நிதிச் சேமிப்பாக மாற்றும் வகையிலும் தங்கப்பத்திர விற்பனை திட்டத்தை 2015 நவம்பரில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இப்பத்திரங்களுக்கு குறிப்பிட்ட சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com