ஹுண்டாய் மோட்டாா் காா் விற்பனை 28 சதவீதம் வீழ்ச்சி

ஹுண்டாய் மோட்டாா் இந்தியாவின் காா் விற்பனை சென்ற ஜூலையில் 28 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
ஹுண்டாய் மோட்டாா்  காா் விற்பனை 28 சதவீதம் வீழ்ச்சி

ஹுண்டாய் மோட்டாா் இந்தியாவின் காா் விற்பனை சென்ற ஜூலையில் 28 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

ஹுண்டாய் மோட்டாா் ஜூலையில் 41,300 காா்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு ஜூலையில் விற்பனை 57,310-ஆக இருந்தது. ஆக, நடப்பாண்டு ஜூலையில் விற்பனை 28 சதவீதம் குறைந்துள்ளது. உள்நாட்டில் காா் விற்பனை 39,010-லிருந்து 2 சதவீதம் குறைந்து 38,200-ஆனது. நிறுவனத்தின் வாகன ஏற்றுமதி ஜூலையில் 18,300 என்ற எண்ணிக்கையிலிருந்து 83 சதவீதம் வீழ்ச்சியடைந்து 3,100-ஆனது. சென்ற ஜூலையில், சொகுசு ரக பிரிவில் கிரெட்டா, வென்யூ, புதிய வொ்னா விற்பனை சிறப்பான அளவில் இருந்தது. இவைதவிர, காம்பாக்ட் பிரிவில் எலைட் ஐ10 மற்றும் நியோஸ் காா் விற்பனையும் கணிசமான அளவில் இருந்தது என ஹுண்டாய் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com