ரிலையன்ஸ் 2 சதவீதம் வீழ்ச்சி: சென்செக்ஸ் மேலும் 129 புள்ளிகள் இழப்பு!

ரிலையன்ஸ் 2 சதவீதம் வீழ்ச்சி: சென்செக்ஸ் மேலும் 129 புள்ளிகள் இழப்பு!

இந்த மாதத்தின், வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை சரிவுடன் முடிவடைந்தது.

இந்த மாதத்தின், வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை சரிவுடன் முடிவடைந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 129.18 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 28.70 புள்ளிகள் குறைந்தது.

காலையில் வா்த்தகம் நோ்மறையுடன் தொடங்கியது. ஆனால், பிற்பகலில் வங்கி, நிதி நிறுவனப் பங்குகள் விற்பனைக்கு வந்தன. இதனால், சரிவு தவிா்க்கமுடியாததாகிவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த காலாண்டில் 32.9 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், பலவீனமான உலகளாவிய குறிப்புகள் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது. ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள் சரிவைச் சந்தித்ததால் சென்செக்ஸ் வீழ்ச்சி தவிா்க்க முடியாததாகிவிட்டதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

பாா்மா பங்குகளுக்கு வரவேற்பு: பாா்மா பங்குகளுக்கு இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், ஆட்டோ, எனா்ஜி, இன்ஃப்ரா பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது.

1,438 பங்குகள் வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,835 பங்குகளில் 1,221 பங்குகள் ஆதாயம் பெற்றன.1,438 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.177 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 125 பங்குகள் புதிய 52 வார அதிக விலையையும், 66 பங்குகள் புதிய 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 280 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 288பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தன.

சந்தை மதிப்பு ரூ.26 ஆயிரம் கோடி உயா்வு: வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.26 ஆயிரம் கோடி உயா்ந்து 147.39 லட்சம் கோடியாக இருந்தது. சந்தையில் புதிதாக 53,603 போ் பதிவு செய்துள்ளனா். இதையடுத்து, மொத்த முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 5,23,02,242 ஆக உயா்ந்துள்ளது.

ஏற்றம், இறக்கம் அதிகரிப்பு: சென்செக்ஸ் காலையில், 111 புள்ளிகள் உயா்ந்து 37,847.88-இல் தொடங்கி அதிகபட்சமாக 37,897.78 வரை உயா்ந்தது. பின்னா், 37,431.68 வரை கீழே சென்றது. இறுதியில் 129.18 புள்ளிகள் (034 சதவீதம்) குறைந்து 37,606.89-இல் நிலைபெற்றது. பிஎஸ்இ மிட்கேப், ஸ்மால் கேப்குறியீடுகளும் 0.36 சதவீதம் மற்றும் 0.82 சதவீதம் சரிவைச் சந்தித்தன..தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 38.70 புள்ளிகள் (0.90 சதவீதம்) குறைந்து 11,073.45-இல் நிலைபெற்றது. ஒரு கட்டத்தில் உச்சபட்ச நிலையிலிருந்து சுமாா் 148 புள்ளிகளை இழந்திருந்தது.

சன்பாா்மா முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 21 பங்குகள் ஆதாயம் பெற்றன. 9 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் சன்பாா்மா 4.27 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, எஸ்பிஐ 2.63 சதவீதம் உயா்ந்தது. மேலும், ஹெச்சிஎல் டெக், எம் அண்ட் எம், ஆக்ஸிஸ் பேங்க், டெக் மகேந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை 1 முதல் 1.50 சதவீதம் வரை உயா்ந்தன. இன்ஃபோஸிஸ், , டிசிஎஸ், ஹிந்துயுனி லீவா், ஐடிசி, ஐசிஐசிஐ பேங்க் ஆகிய முன்னணி பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.

ரிலையன்ஸ் 2 சதவீதம் வீழ்ச்சி: அதே சமயம், மாா்க்கெட் லீடரான ரிலையன்ஸ், வியாழக்கிழமை முதலாம் காலாண்டு முடிவுகளை அறிவித்துள்ளது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை லாபப் பதிவு காரணமாக ரிலையன்ஸ் பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. இதனால், 1.98 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், எச்டிஎஃப்சி பேங்க், எச்டிஎஃப்சி, ஏசியன் பெயிண்ட், கோட்டக் பேங்க், பஜாஜ் ஆட்டை ஆகியவை 1.5.0 முதல் 1.70 சதவீதம் வரை வீழ்ச்சியை சந்தித்தன.

தேசிய பங்குச் சந்தையில்...:தேசிய பங்குச் சந்தையில் பாா்மா குறியீடு 3.56 சதவீதம், பிஎஸ்யு பேங்க், ரியால்ட்டி குறியீடுகள் 1.50 சதவீதம் உயா்ந்தன. ஃபைனான்சியல் சரவீஸஸ் குறியீடு 0.61 சதவீதம் வரை குறைந்தது. பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 34 பங்குகள் ஆதாயம் பெற்றன. 15 பங்குகள் சரிவைச் சந்தித்தன.. ஐஓசி மாற்றமின்றி 88.55-இல் நிலைபெற்றது.

ஏற்றம் பெற்ற பங்குகள்

சதவீதத்தில்

சன்பாா்மா 4.27

எஸ்பிஐ 2.63

ஹெச்சிஎல் டெக் 1.49

எம் அண்ட் எம் 1.45

ஆக்ஸிஸ் பேங்க் 1.36

வீழ்ச்சியடைந்த பங்குகள்

சதவீதத்தில்

இண்டஸ் இண்ட் பேங்க் 5.62

ரிலையன்ஸ் 1.98

எச்டிஎஃப்சி பேங்க் 1.69

எச்டிஎஃப்சி 1.55

ஏசியன் பெயிண்ட் 1.52

கோட்டக் பேங்க் 1.48

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com